நிர்மலா, உமா, புனிதா, மைதிலி.. சீரழிந்த உயர் கல்வித்துறை... சுனில் பாலிவால் மாற்றம் ஏன்?
சென்னை: தமிழக உயர் கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் உயர் கல்வித்துறை செயலாளராக இருந்து வந்த சுனில் பாலிவால் மாற்றப்பட்டுள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக அரசு இன்று பல முக்கிய துறை அதிகாரிகள், கலெக்டர்களை மாற்றியுள்ளது. அதில் முக்கியமானவர் சுனில் பாலிவால். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வித்துறை செயலாளராக இருந்து வந்தார். இன்று அவர் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன சர்ச்சை, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் பாலியல் வற்புறுத்தல் புகார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா மீதான புகார்கள், திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தங்கப் பாண்டியன், மைதிலி மற்றும் புனிதா மீதான பரபரப்பு பாலியல் புகார்கள் என மோசடிகள் நீண்டு கொண்டே போகின்றன.
இன்னும் வெளியில் வெடித்துக் கிளம்பக் காத்திருக்கும் மோசடிகளும் அதிகம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் உயர் கல்வித்துறையின் செயலாளரான சுனில் பாலிவால் மாற்றப்பட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications