உருகி உருகி காதலித்தனர்.. பிறகு ஏன் இந்தக் கொடூரக் கொலை.. கண்ணீரில் சாத்தூர் கிராமம்
Recommended Video

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று நடந்த கொடூரக் கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஎல் ரெட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன் மகாலட்சுமி என்ற மாணவியை மதன் என்ற இளைஞர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றார். அத்தோடு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தக் கொடூரக் கொலையும், தற்கொலையும் அந்த கிராமத்தை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. ஆனால் இருவரும் ஒரு ஆண்டு அல்ல, இரண்டு ஆண்டு அல்ல, மாறாக 8 ஆண்டு காலம் காதலித்து வந்துள்ளனர் என்ற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பள்ளிக்காதல்
இருவரும் பள்ளியில் படித்தபோதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே ஜாதியாம். எனவே இதற்கு பெரிய அளவில் பிரச்சினை எழவில்லை என்று தெரிகிறது.

கல்லூரியிலும் தொடர்ந்த காதல்
பின்னர் இருவரும் கல்லூரிப் படிப்பிலும் காதலைத் தொடர்ந்துள்ளனர். சட்டப் படிப்பில் சேர்ந்தார் மதன். மகாலட்சுமி தனது ஆசிரியர் கனவை நனவாக்க ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்கிறார். அங்கும் காதல் தொடர்கிறது.

வாய் சரியில்லை
இந்த நிலையில் மதனின் போக்கில் மாற்றம் தெரிகிறது. மகாலட்சுமி மீது சந்தேகப்பட ஆரம்பிக்கிறார். அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் உன்னை கல்யாணம் செய்ய முடியாது என்று அவர் கூற அதிர்ச்சி அடைகிறார் மகாலட்சுமி. இதனால் அவரைப் பிரிகிறார். ஆனால் மதன் மீண்டும் வந்து ஒட்டுகிறார். கெஞ்சுகிறார். ஆனால் மகாலட்சுமி அதை நிராகரிக்கிறார்.

கோபத்தில் கோரக் கொலை
இந்த நிலையில்தான் நேற்று மகாலட்சுமியைக் கொலை செய்து விட்டார் மதன். கிராமமே இவரது செயலால் வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது. உருகி உருகி காதலித்து விட்டு இப்படி ஆகி விட்டதே என்று அனைவரும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications