'பேட்ட' என்ற டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு குறியீடு இருக்கிறதா?
Recommended Video

சென்னை: பேட்ட என்று ரஜினிகாந்த்தின் புதிய திரைப்படத்திற்கு வைத்துள்ள பெயர் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள திரைப்படத்திற்கு 'பேட்ட' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பேட்ட என்ற பெயர் தமிழ் சினிமா உலகிற்கு புதிது கிடையாது. இயக்குனர் செல்வராகவனின் புதுப்பேட்டை திரைப்படம் தமிழ் சினிமா உலகில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

அதிர்வு
இதன் பிறகு இப்பொழுது அதுபோன்ற தலைப்புடன் வெளியாக உள்ள, ரஜினிகாந்த் திரைப்படம் மீண்டும் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதில் ஒற்றுமை என்னவென்றால் புதுப்பேட்டை திரைப்படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ்.

பேட்ட தலைப்புக்கு வரவேற்பு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் படத்தின் பெயர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. எம்ஜிஆர் திரைப்படத்தின் தலைப்பை ரஜினிகாந்த் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் பேட்ட என்ற தலைப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
|
தலைவர் போகப்போகிறார் கோட்டை
இந்த தலைப்பை பார்த்ததும், "பேட்ட.. இனிமேல் தலைவர் போகப் போகிறார் கோட்டை" என்றெல்லாம் ரைமிங்காக ரஜினி ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். இது ஒரு பக்கம் என்றால், பேட்ட என்ற சொல் பொதுவாக ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு தான் இருக்கிறது. எனவே கபாலி, காலா போன்ற சி சென்டர் ஆடியன்ஸுக்கும் புரியாத இரு படங்களில் நடித்த ரஜினிகாந்த், இப்பொழுது அடித்தட்டு மக்களை நோக்கி இந்த படத்தை நகர்த்தி உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அடித்தட்டு மக்கள்
ரஜினிகாந்தின் பலமே அடித்தட்டு மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்குதான். அரசியலுக்கு வர உள்ள நிலையில், கமல்ஹாசனின், அன்பே சிவம் மாதிரி மேல்தட்டு ரசிகர்களுக்கு புரியும்படியான குறியீடுகளுடன் கூடிய இயக்குனர் ரஞ்சித்தின் திரைப்படங்களில் நடித்து வந்தது அவருக்கு அரசியல் மைலேஜ் கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் பேட்ட என்ற தலைப்பை வைத்து பார்க்கும் போது, ரஜினிகாந்த் இறங்கி அடிக்க ஆயத்தமாகிவிட்டார் என்று தோன்றுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications