சசிகலாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்க தயங்கும் ஆளுநர்... பின்னணியில் 'துண்டு தலைவர்'?
சசிகலாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழக ஆளுநர் தயங்குவதின் பின்னணியில் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: சசிகலாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் தயங்குவதன் பின்னணியில் மன்னார்குடி கோஷ்டி மீது திடீர் பாசம் காட்டிய துண்டு தலைவர்தான் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே காங்கிரஸ், பாஜக கட்சிகள் தமிழக அரசியலில் அதீத அக்கறை காட்டின. மன்னார்குடி கோஷ்டியினர் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் மூலமாக காங்கிரஸுடன் கை கோர்த்தனர். அதே நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் துண்டு தலைவரும் அப்பல்லோ போவதும் ஆளுநர் மாளிகை செல்வதுமாக இருந்தார்.
அத்துடன் மன்னார்குடி கோஷ்டிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தார். ஆனால் துண்டு தலைவரின் இந்த ஆதரவு நீண்டகாலம் நீடிக்கவில்லை.

நோ கமெண்ட்ஸ்
அண்மைக்காலமாக அதிமுக தொடர்பாகவோ மன்னார்குடி கோஷ்டி தொடர்பாகவே எந்த ஒரு கருத்தையும் அந்த துண்டு தலைவர் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார். சசிகலா அதிமுக பொதுச்செயலரானது, முதல்வராக தேர்வு செய்யப்பட்டதிலும் கூட எந்த கருத்தையும் தெரிவிக்காமலேயே அந்த தலைவர் இருந்து வந்தார்.

மத்திய அரசின் திட்டம்
இந்த நிலையில் சசிகலா இன்று முதல்வராக பதவியேற்க திட்டமிட்டிருந்தார். ஆனால் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ், உடனே சென்னை வராமல் தாமதிப்பதால் இந்த பதவியேற்பு தள்ளிப் போயுள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம் என்பது மத்திய அரசின் திட்டமாம்.

மும்பையில் துண்டு தலைவர் முகாம்
மத்திய அரசின் இந்த பின்னணியிலும் அந்த துண்டு தலைவரே இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பொறுப்பு ஆளுநருக்கு சொந்தமான மும்பை பங்களாவில் துண்டு தலைவர் குடும்பத்தினருடன் ஒரு வார காலம் தங்கியிருந்தாராம்.

தமிழக பாஜக முகம்
அங்கிருந்தபடியே தமிழக நிகழ்வுகளை கவனித்து அது தொடர்பாக பாஜக மேலிடத்துடன் ஆலோசித்து வந்தாராம். இந்த கூட்டு ஆலோசனையில்தான் சசிகலாவுக்கு உடனே முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாம். அதாவது தமிழக பாஜகவுக்கு தலைவர்கள் பலர் இருந்தாலும் துண்டு தலைவரைத்தான் அதிகமாக நம்புகிறதாம் அந்த கட்சி மேலிடம். அந்த அளவுக்கு செல்வாக்காக இருக்கிறாராம். இந்த உறவு தொடரும் நிலையில் மத்திய அமைச்சரவையில் துண்டு தலைவரை சீக்கிரம் பார்த்துவிடலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications