ஒரு கல்லில் இரண்டு மாங்காய்... தினகரனின் தடாலடி பேட்டியின் 'அடடே' பின்னணி
சென்னை: அதிமுகவின் துணைப் பொதுச்செயலரான டி.டி.வி. தினகரன் திடீரென நடராஜன், திவாகரனுக்கு எதிராக காட்டமாக பேசியிருப்பதே ஒரே கல்லில் 2 மாங்காய்களை வீழ்த்தும் வியூகம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை முழுமையாக கைப்பற்றுவதில் சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமுமே முனைப்பாக இருந்தது. முதல் கட்டமாக சசிகலா, தினகரன், வெங்கடேஷ் மூவரும் மட்டுமே வெளிப்படையாக அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தினர்.
சசிகலா பொதுச்செயலரானார்... பின்னர் முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட்டார்... ஆனால் சசிகலா சிறைக்குப் போக நேரிட்டது. இதனால் இலவு காத்த கிளியாக இருந்த தினகரன் மற்றும் வெங்கடேஷை அதிமுகவில் சேர்த்துவிட்டார் சசிகலா. அத்துடன் தினகரனுக்கு துணைப் பொதுச்செயலர் பதவியும் கொடுத்துவிட்டு சிறைக்குப் போனார் சசிகலா.

தினகரனின் ஆட்டம்
அதன்பின்னர் தினகரனின் ஆட்டம் ஆரம்பமானது... தம்மோடு நேற்று வரை இருந்த டாக்டர் வெங்கடேஷை ஓரம்கட்டி வைத்தார். சசிகலாவின் கணவர் நடராஜன், திவாகரன் ஆகியோர் பேச்சை கேட்கவே கூடாது என அதிமுகவினருக்கும் அமைச்சர்களுக்கும் உத்தரவு போட்டார் தினகரன். இவர் போகிற போக்கைப் பார்த்தால் சசிகலாவையும் கூட ஓரம்கட்டி விடுவார் என்கிற ரேஞ்சுக்குத்தான் சாணக்கியத்தனமாக செயல்பட்டு வருகிறார் தினகரன்.

அதிரடி பேட்டி
இந்த நிலையில் திடீரென இன்று நடராஜன், திவாகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க மாட்டோம்; அவர்களது கருத்தை அதிமுகவின் நிலைப்பாடாக ஏற்க முடியாது என்றெல்லாம் தடாலடியாக பேட்டி கொடுத்திருக்கிறார் தினகரன்.

திவாகரனுக்கு செக்
தற்போதைய நிலையில் நடராஜன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஒதுங்கிய நிலையில்தான் இருக்கிறார். தினகரனுக்கு இப்போது சவாலாக இருப்பது திவாகரன்மட்டுமே. இப்படி பேட்டி கொடுத்திருப்பதன் மூலம் திவாகரனுக்கு ஒரு செக் வைத்துவிட்டார் தினகரன்.

ஓபிஎஸ் அணிக்கு பதிலடி
மற்றொன்று ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் எப்படியும் மன்னார்குடி குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்போம் என்ற பிரசாரத்தைத்தான் முன்வைக்கப் போகிறார்கள்; இப்படி ஒரு பேட்டி கொடுத்ததன் மூலமாக நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினர் யாரையும் சேர்க்கவில்லை என பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறோம் என பதிலடி கொடுத்து ஓபிஎஸ் அணி வாயை மூடவும் திட்டமிட்டுள்ளாராம் தினகரன். ஆக ஒரு பேட்டியின் மூலம் 2 மாங்காய்களை வீழ்த்துகிறார் தினகரன் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications