"என்கவுண்டருக்கு" இரையாவதிலிருந்து தப்பவே சரணடைந்தாரா வரிச்சியூர் செல்வம்?
மதுரை: மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில் பிரபல தாதா வரிச்சியூர் செல்வம், மணிமாறன் என்கிற கீரி மணி ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்ததற்குப் பின்னணியில் போலீஸ் என்கவுண்டர் பயம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வரிச்சியூர் செல்வம் நீண்ட காலமாக போலீஸின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவர். அவர் மீது இல்லாத வழக்குகளே இல்லை. என்கவுண்டர் பட்டியலில் அவர் ஏற்கனவே சேர்க்கப்பட்டவர்தான்.
இருப்பினும் அவர் அப்படி இப்படி என தப்பிப் பிழைத்து வருகிறார். அதேசமயம், தனது சேட்டைகளையும் அவர் நிறுத்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் மதுரை அண்ணாநகர் நாட்டு வெடிகுண்டு விவகாரத்தில் அவர் சிக்கினார்.
இதனால் செல்வம் தரப்பு பீதியடைந்தது. இந்த முறை என்கவுண்டரில் போட்டாலும் போட்டு விடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே எழுந்தது. இதையடுத்தே செல்வம் கோர்ட்டில் பாதுகாப்பாக சரணடைந்து விட்டார் என்கிறார்கள்.

3 பேருக்கு வலைவீச்சு
நாட்டு வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக செல்வம், கீரிமணி, பார்த்திபன் ஆகிய மூன்று பேருக்கு போலீஸார் குறி வைத்தனர். இவர்கள்தான் இந்த விவகாரத்துக்குப் பின்னர் தலைமறைவானவர்கள்.

அப்பள ராஜாதான் ஆரம்பம்
பிரபல ரவுடி அப்பள ராஜாவின் கூட்டாளியான பிரவீன் என்பவர், வரிச்சியூர் செல்வத்துக்கு 20 வெடிகுண்டுகளை கீரிமணி மூலம் கொடுத்து அனுப்பியதாக போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார். இதில் 11 குண்டுகள் சிக்கி விட்டன. மற்ற 9 குண்டுகள் என்ன ஆனது, எங்கே போனது என்பது தெரியவில்லை.

பெருசு அழகரைப் போட்டுத் தள்ள
மதுரை பெத்தானியாபுரம் பெருசு அழகர் என்பவரை போட்டுத் தள்ள வரிச்சியூர் செலவம் திட்டமிட்டு வந்ததாகவும், இதற்காகவே இந்த வெடிகுண்டுகளை அவர் ஏற்பாடு செய்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

பல வழக்குகள்
வரிச்சியூர் செல்வம் பயங்கரமான ரவுடி ஆவார். இவருக்குக் கீழ் பலர் உள்ளனர். கொலை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, பணம் பறிப்பு என பல வழக்குகள் செல்வம் மீது உள்ளன.

என்கவுண்டர் அபாயம்
தற்போது நாட்டு வெடிகுண்டு வழக்கில் சிக்கியதால் நிச்சயம் என்கவுண்டர்தான் என்ற முடிவுக்கு செல்வம் வந்து விட்டார். இதுபோல முன்பு பலமுறை கூட அவர் கோர்ட்டில் சரணடைந்து தப்பியுள்ளார். அதே பாணியில்தான் தற்போதும் சரணடைந்து விட்டதாக கூறுகிறார்கள்.

விசாரித்தால் விவரம் தெரியும்
தற்போது போலீஸார் செல்வம், பார்த்திபன், கீரிமணி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். அப்போதுதான் ஏன் குண்டு தயாரித்தனர், 9
குண்டுகள் எங்கே, அவர்களின் திட்டம் என்ன என்பது குறித்த விவரங்கள் தெரிய வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications