பனியன் கம்பெனியில் மாரீஸுடன் பின்னி பிணைந்த சுசீலா.. கள்ளக்காதலனை கணவனாக்க முயன்றதால் நிகழ்ந்த கொலை
திருப்பூர்: பல்லடம் அருகே கடந்த 4 ஆம் தேதி பனியன் நிறுவன தொழிலாளி 13 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டதில் கள்ளகாதல் விவகாரத்தால் இறந்தவரின் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (37). கொடைக்கானலை சேர்ந்த இவர் மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வருகிறார்.
சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 4 ஆம் தேதி பணி முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியில் வந்த கோபால் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

கடை முன் பேசிய நபர்
ஒரு கடை அருகே நின்று பேசி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் சரமாரியமாக குத்தினர். கழுத்து, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் 13 முறை குத்தியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்திய நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

கொலை
இந்தக் கொலையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் அங்கு வந்த போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய்
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடியது. கொலைக்கான காரணம் குறித்தும், தப்பி ஓடிய மூவர் குறித்தும் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோபாலின் மனைவி சுசீலாவின் நடவடிக்கைகளில் மாறுபாடு தெரிந்தது.

விசாரணை
இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபரான கோபாலின் மனைவி சுசீலா என்பவரும் மாரீஸ் என்பவரும் ஒரு பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 வருடங்களாக இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாரீஸை சுசீலா கேட்டுள்ளார்.

திருமணம்
உனக்குதான் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதே, இப்போது எப்படி திருமணம் செய்து கொள்வது என மாரீஸ் கேட்டுள்ளார். அதற்கு சுசீலா, தன் கணவர் கோபாலை கொலை செய்யலாம் என தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். கூலிப்படையை வைத்து கொலை செய்யலாம் என திட்டமிட்டு திருச்சியில் இருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளனர்.

கோபால் கம்பெனி
அதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை கோபால் கம்பெனி வேலையை முடித்து வீடு திரும்பும் போது மாரீஸ் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் கோபாலை 13 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தது, தற்போது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தற்போது 6 நபர்களை பல்லடம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலன்
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications