செல்போன் வாங்கியது குத்தமா... இந்தா வாங்கிக்கோ கட்டையடி... கணவனைப் போட்டுச் சாத்திய மனைவி!
கமுதி: புது செல்போன் ஏன் வாங்கினாய் என்று கேட்ட ஒரே காரணத்திற்காக தனது கணவனை உருட்டுக்கட்டையால் போட்டு வெளுத்து விட்டார் கமுதிக்காரப் பெண் ஒருவர். பாவம்,அடி வாங்கிய கணவர் போலீஸில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கமுதி அருகே உள்ளது கோவிலாங்குளம் கிராமம். இதற்கு அருகே உள்ளது எருமைக்குளம் என்ற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர் தாமரை. இவருக்கு 45 வயதாகிறது. இவரது மனைவி பெயர் ஜெயலட்சுமி, இவருக்கு 40 வயதாகிறது.
ஜெயலட்சுமி சமீபத்தில் தனது கணவருக்குத் தெரியாமல் புதிதாக ஒரு செல்போன் வாங்கியுள்ளார். இது கணவருக்குத் தெரியவர, ஏன் என்னிடம் சொல்லாமல் செல்போன் வாங்கினாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் தாமரைக்கும், ஜெயலட்சுமிக்கும் சண்டையாகி விட்டது. அப்போது கோபமடைந்த ஜெயலட்சுமி, வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து போட்டு தாமரையை சரமாரியாக அடித்து விட்டார்.
லேசான காயத்துடன் தப்பிய தாமரை நேராக போலீஸுக்குப் போய் விட்டார். மனைவி தன்னை கட்டையால் அடித்து விட்டதாக அவர் புகார் கூற, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது ஜெயலட்சுமியைக் கைது செய்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications