கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவி கொலை.. தற்கொலை என நாடகமாடிய கணவன் கைது
கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்: மனைவியின் மீது சந்தேகப்பட்ட கணவன் மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடினார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கணவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலாம்பட்டி பஞ்சாயத்து மாவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னமணி. கட்டடத் தொழிலாளியான இவருக்கு 28 வயதில் பூங்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் தர்ஷினி, தனிஷ்கா என 2 மகளும் உள்ளனர்.

சின்னமணிக்குக்கும் பூங்கொடிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் மீது சின்னமணிக்கு சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பூங்கொடி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்த வெண்ணந்தூர் போலீசார் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, பூங்கொடியின் தந்தை ஆத்தூர் வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். மேலும், பூங்கொடி கழுத்து நெரிக்கப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே பூங்கொடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையை மருத்துவர்கள் வழங்கினார்கள். அதில் பூங்கொடியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதன் அடிப்படையில் கணவர் சின்னமணியை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது சின்னமணி, தனது மனைவி பூங்கொடி மீது சந்தேகம் இருந்ததையும், அதன் காரணமாக அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்ததையும் ஒப்புக் கொண்டார். மேலும், சம்பவத்தன்று, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, சண்டையாக முற்றி, இறுதியில் பூங்கொடியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்ததையும் சின்னமணி ஒப்புக் கொண்டார். தன் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, உடலை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு பூங்கொடி தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடியதையும் சின்னமணி ஒப்புக் கொண்டார்.
பின்னர், ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னமணி, சேலம் நடுவன் சிறையில் அடைக்கப்பட்டார். மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை என்று கணவன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications