ஜாலியாக இருந்தபோது உள்ளே புகுந்த கணவர்.. கள்ளக்காதலருடன் அடித்து வெளுத்த மனைவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்ததை பார்த்த கணவர் மீது இருவரும் தாக்குதல் நடத்தியது அதிர வைத்துள்ளது.

நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிசந்திரன் (48). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி பெயர் செல்வி (37). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

Wife and paramour attacked husband

விளாம்பட்டி அருகே உள்ள முத்துலாபுரத்தில் ரவிச்சந்திரன் மருந்து கடை வைத்துள்ளார். அங்கு செல்வி வந்து மருந்து வாங்கியபோது விளாம்பட்டியைச் சேர்ந்த உக்கிரபாண்டி என்பவருடன் பழக்கமானது.

அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செல்வியின் வீட்டுக்கு உக்கிரபாண்டி வந்தார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அந்த நேரமாக பார்த்து ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்து விட்டார். வந்தவர் மனைவி இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். தட்டிக் கேட்டார். ஆனால் உல்லாசத்தின்போது குறுக்கே வந்ததோடு இல்லாமல் தட்டி வேறு கேட்டதால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து ரவிச்சந்திரனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

உக்கிரபாண்டி தரப்பைச் சேர்ந்த இரும்புதுரை, கருப்பாயி ஆகியோரும் ரவிச்சந்திரனை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் மனைவி செல்வி, உக்கிரபாண்டி, இரும்புதுரை, கருப்பாயி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Husband saw his wife and her paramour was in the enjoyment in Nilakkottai. Both they attacked husband severely.
Please Wait while comments are loading...