தற்கொலை செய்யக் கூவத்தில் குதித்த கணவர் – காப்பாற்ற போய் சேற்றில் மாட்டிய மனைவி!
சென்னை: சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்யச் சென்ற கணவரைக் காப்பாற்ற சென்ற மனைவியும் சேற்றில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலக்கொத்தளத்தை சேர்ந்தவர் ஆனந்த் என்ற கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவி. கணவரின் குடிப்பழக்கம் காரணமாக ஆனந்த் மற்றும் தேவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் ஆனந்த் குடித்து விட்டு வந்தார்.
இதனால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் கூவத்தில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
கணவரைத் தேடி தேவியும் பின்னால் சென்றார். அப்போது ஆனந்த் அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்தார். அவரை காப்பாற்றுவதற்காக தேவியும் கூவத்தில் குதித்தார்.
அப்போது தேவி சகதியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு ஏராளமானோர் அங்கு கூடினார்கள். இதற்குள் ஆனந்த் தண்ணீரில் இருந்து கரையேறி தப்பி ஓடினார்.
சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கொண்டித்தோப்பு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தேவியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய ஆனந்தை தேடி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications