For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லூர் கே.ராஜு இறந்துவிட்டதாக தகவல் வெளியிட்ட விக்கிபீடியா.. விஷமிகள் செய்த வேலை

அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு இறந்துவிட்டதாக விக்கிபீடியாவில் தகவல் வெளியாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு இறந்துவிட்டதாக விக்கிபீடியாவில் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிமுக கட்சிக்காக மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு எப்போதும் இணையத்தில் டாப் டிரெண்டிங்கில் இருப்பவர். இவரை கலாய்த்து மீம் போடுவதற்கு நிறைய நெட்டிசன்கள் இருக்கிறார்கள்.

Wikipedia says that Sellur K. Raju died in 2012

நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் பயன்படுத்த வேண்டும் என்று கூறி இணையத்தில் வைரல் ஆனவர். இவர் இப்போதும் கூட டிரெண்டிங்கில்தான் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சில விஷமிகள் செய்த வேலையால் இவர் வைரல் ஆகி இருக்கிறார். விக்கிபீடியா தளத்தில் இவர் இறந்துவிட்டதாக யாரோ மாற்றி இருக்கிறார்கள்.

கடந்த 2012 ஜூன் 24ம் தேதியே இவர் இறந்துவிட்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது. நீண்ட நேரமாக இது இன்னும் சரி செய்யப்படாமல் இருக்கிறது.

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானலும் சென்று தகவலை மாற்ற முடியும். அதை பயன்படுத்தி இவருக்கு வேண்டாதவர்கள் இந்த செயலை செய்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.

English summary
Wikipedia says that Sellur K. Raju died in 24 June 2012. Some one wrongly edited the info and published it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X