நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் 2வது இன்னிங்ஸ்.. திரைப்படத்தில் மீண்டும் நடிக்க முடிவு.. சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியலுக்கு வரும் முன் சினிமா உலகில்தான் பிரபலமாக இருந்தார். இனியவளே, தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட 5 படங்களை இயக்கி இருக்கிறார். 10 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இலங்கை இறுதி போருக்கு பின் அரசியலில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார் சீமான். அதன்பின்பே நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது.

இயக்குனர்
கடைசியாக 2008ல் வந்த வாழ்த்துகள் படம்தான் இவர் இயக்கத்தில் வந்த கடைசி படம் ஆகும். அதன்பின் படம் எடுப்பதை மொத்தமாக நிறுத்திவிட்டு அரசியலில் கவனம் செலுத்தினார். முக்கியமாக ஈழ பிரச்சனை காரணமாக மொத்தமாக சினிமா இயக்குவதையே நிறுத்திவிட்டார்.

எப்போது நடித்தார்
கடைசியாக மறைந்த நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் இயக்கத்தில் வந்த நாகராஜன் சோழன் எம்ஏ, எம்எல்ஏ படத்தில் நடித்து இருந்தார். அதன்பின் நடிப்பிற்கும் முழுக்கு. போட்டார் இந்த நிலையில் மீண்டும் படத்தில் நடிக்க முடிவெடுத்து இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நடிக்க உள்ளார்
இந்த நிலையில்தான் மீண்டும் நடிக்க உள்ளாதாக சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் முழுமூச்சில் நிறைய படங்களில் நடிக்க இருக்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பே எந்த மாதிரியான படங்களில் நடிப்பது என்று முடிவெடுப்பேன் என்றுள்ளார்.

என்ன படம்
சீமான் நடிப்பில் வெளியாவதாக ஏற்கனவே தவம் என்ற படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படமும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பே தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அரசியல்வாதி சீமானை மீண்டும் திரையில் பார்க்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications