மத்திய அரசுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா?
சென்னை: தமிழகத்தின் பிரச்சனைகளில் எப்போதும் பாராமுகமாக மத்திய அரசு இருப்பதை சுட்டிக்காட்டி அதிமுகவின் லோக்சபா எம்.பிக்கள் ராஜினாமா செய்யக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம், காவிரி நதிநீர், கூடுதல் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பி வருகிறார். ஆனால் தமிழகத்தின் குரலை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதே இல்லை என்ற குமுறல் இருந்து வருகிறது.
காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டபோதே மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்யக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டம் முடிந்தவுடன் மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுக முடுக்கிவிட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழகத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் லோக்சபா எம்.பிக்களை ராஜினாமா செய்ய சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications