அதிமுக வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?.. ஓ.பி.எஸ் கோரிக்கை குறித்து அதிகாரிகள் அவசர ஆலோசனை!
அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்குவது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க கோரி அதிமுக பொருளாளரும், முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைதிப் புரட்சியை அரரங்கேற்றியுள்ளார். அது தற்போது நாலாபுறமும் வெடிக்க் தொடங்கியுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கக் கோரி மயிலாப்பூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். தனது உத்தரவு இல்லாமல் கணக்கை இயக்கக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கை குறித்து தற்போது வங்கி அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரின் கோரிக்கையை ஏற்று வங்கிக் கணக்கை முடக்கி வைக்கும் முடிவுக்கு அவர்கள் வரக் கூடும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் இந்த வங்கிக் கணக்கிலிருந்து ஒரு பைசாவைக் கூட ஓ.பன்னீர் செல்வத்துக்குத் தெரியாமல் எடுக்க முடியாது. அதிமுக ஸ்தம்பித்துப் போகும்.
குறிப்பாக தற்போது ரிசார்ட் உள்ளிட்ட இடங்களில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களுக்கான செலவுக்கு வங்கியிலிருந்து 5 பைசா கூட எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications