திமுகவின் கோட்டையான வடசென்னையில் வெற்றி பெறுவாரா அதிமுகவின் வெங்கடேஷ்?
சென்னை: திமுகவின் கோட்டையான வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் டி.ஜி. வெங்கடேஷ் பாபு போட்டியிடுகிறார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியில் டி.ஜி. வெங்கடேஷ் பாபுவை அதிமுக களம் இறக்கியுள்ளது. வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளரான அவர் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவராகவும் உள்ளார்.

1957ம் ஆண்டு முதல் இதுவரை வட சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதே இல்லை. கடந்த 1996ம் ஆண்டு முதல் வட சென்னையில் திமுக வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தான் வெங்கடேஷ் வட சென்னையில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இம்முறை திமுக சார்பில் புதுமுகமான வழக்கறிஞர் கிரிராஜன் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருடன் தற்போதும் நெருக்கமாக உள்ளதாக கட்சி தலைமைக்கு புகார்கள் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications