நாளை மு.க.அழகிரி ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தப் போகிறாரா?
Recommended Video

சென்னை: மு.க.அழகிரி தரப்பிலிருந்து நாளை பரபரப்பான நிகழ்வுக்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவரது ஆதரவாளர்களும் புது உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.
திமுகவில் அசைக்க முடியாத தலைவராக விளங்கியவர் அழகிரி. என்னதான் கட்சித் தலைமை சென்னையில் இருந்தாலும் அழகிரியின் இருப்பும் அதற்கு நிகராக இருந்து வந்தது. தென் மாவட்ட திமுகவின் தூணாக பலர் இருந்தாலும் அவர்களையும் தாண்டி அழகிரி கண் அசைவு கட்டாயம் என்ற நிலையில் திமுக இருந்தது ஒரு காலம்.
இப்போது அது மலையேறி விட்டது. அழகிரி தற்போது திமுகவில் இல்லை. நீக்கப்பட்டு விட்டார். ஆனால் திடீரென தற்போது அழகிரிக்கு திமுகவுக்குள் ஒரு விதமான முக்கியத்துவம் உருவாகி வருகிறது. அழகிரி தேவை என்ற குரல் வலுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க ஆரம்பித்துள்ளது.

அழகிரியின் புத்துணர்ச்சி
சில காலமாக அமைதியாக இருந்து வந்த அழகிரி தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்துள்ளாராம். சமீபத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி பேட்டி அளித்திருந்தார். அத்தோடு நிற்க மாட்டாராம், அடுத்தடுத்து அதிரடிகளுக்கு அவர் காத்திருக்கிறாராம்.

சென்னையில் அழகிரி முகாம்
தற்போது அழகிரி சென்னையில் முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நாளை அவரிடமிருந்து அதிரடி நிகழ்வுக்கு வாய்ப்புள்ளதாக பேச்சும் அடிபடுகிறது. அவர் ஏதாவது அறிவிப்பாரா அல்லது புதிய திட்டம் எதையும் செயல்படுத்தப் போகிறாரா என்பது தெரியவில்லை.

மதுரையில் உற்சாகம்
அழகிரி மீண்டும் திமுகவுக்கு வர வேண்டும். அப்போதுதான் திமுக பழைய பலத்தைப் பெறும். இல்லாவிட்டால் பெரும் சிக்கல்தான் வரும் என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள் புதிய உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

ரஜினியை சந்திக்கிறார் அழகிரி
புதிய அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்கவும் அழகிரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ரஜினியுடன் இணைந்து அழகிரி செயல்படப் போகிறாரா அல்லது ரஜினி உதவியுடன் மீண்டும் திமுகவுக்குத் திரும்பப் போகிறாரா என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் அழகிரி தரப்பு புதிய உற்சாகத்துடன் காணப்படுவதை அரசியல் வட்டாரமே உன்னிப்பாக கவனித்து வருகிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications