ப்ளஸ் 2விலும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன், சி.ஏ. படிப்பேன்: 500க்கு 499 எடுத்த சிவகுமார் பேட்டி
விருதுநகர்: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ள விருதுநகர் மாணவர் சிவகுமார் சி.ஏ. படிக்க விரும்புகிறார். மேலும் ப்ளஸ் 2விலும் மாநிலத்தில் முதலாவதாக வருவேன் என சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிகுளத்தில் உள்ள நோபல் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவர் சிவகுமார் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ளார்.
அவர் தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மீதமுள்ள 4 பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சிவகுமார்
மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சிவகுமார் தெரிவித்துள்ளார். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிறார் சிவகுமார்.

மனப்பாடம்
பாடங்களை புரிந்து படிக்க வேண்டுமே தவிர மொட்டை மனப்பாடம் செய்யக் கூடாது. நான் கடினமாக உழைத்தேன். அதனால் மாநிலத்தில் முதலாவதாக வருவேன் என்று எதிர்பார்த்தோம். எதிர்பார்த்தபடியே நடந்துள்ளது.

எழுதி எழுதி
எங்களை போன்றே ஆசிரியர்களும் கடினமாக உழைத்தார்கள். சின்ன சின்ன விஷயங்களிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். பாடங்கள் திரும்பத் திரும்ப எழுதி படித்தேன்.

சி.ஏ.
நான் சி.ஏ. படிக்க விரும்புகிறேன். அதனால் ப்ளஸ் 1 வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுக்கப் போகிறேன். பத்தாம் வகுப்பை போன்றே ப்ளஸ் 2 தேர்விலும் மாநிலத்தில் முதலாவதாக வருவேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications