நாளை முடிகிறது கெடு.. அலுவலகம் வருவாரா தினகரன்?.. பெரும் பரபரப்பில் அதிமுக!
நாளையோடு கெடு முடிவடையும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குத் தினகரன் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அதிமுகவிற்குள் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை: தினகரன் விதித்த 60 நாள் கெடு நாளையோடு முடிவடையும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைய நாளை வரை டிடிவி தினகரன் கெடு விதித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு அணிகளும் இணைவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை
இந்நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான எந்த முயற்சியும் எடுக்காததால், 4ம் தேதியான இன்று அதிரடியாகத் தனது முடிவுகளை அறிவிக்க உள்ளதாகத் தினகரன் அறிவித்திருந்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கை
மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை என்னென்ன எடுக்கப்படும் என்பதை நாளைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் தினகரன் அறிவித்திருந்தார். இதுதவிர, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கட்சியைப் பலப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

கைப்பற்றப்படுமா கட்சி அலுவலகம்
இதனிடையே, தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தைக் கைப்பற்றி விடுவார் என்ற பதற்றம் அதிமுகவில் ஏற்பட்டது. இதனால், அலுவகத்திற்கு முன் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்.

இன்று என்ன முடிவு
இந்நிலையில், இன்று முடிவுகளை அறிவிக்க உள்ளதாகக் கூறிய தினகரன் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதே போல், துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சிப் பணிகளை மேற்கொள்ளத் தினகரன் அலுவலகத்திற்கு வருவார் என்று தினகரன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விரைவில் முடிவு
தினகரன் அதிரடியாக முடிவை எடுத்துவிட்டால் எடப்பாடி அணிக்கும் ஓபிஎஸ் அணிக்கும் சிக்கல் உருவாகிவிடும் என்பதால் அதனை எப்படிச் சமாளிப்பது என இரு அணிகளும் கூடிக் கூடி பேசி வருகின்றன. யார் என்ன செய்தாலும் நாளை இதற்கான முடிவு தெரிந்துவிடும் என்கின்றனர் அதிமுகவினர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications