ஆர் கே நகரில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமா திமுக? - ஒரு அலசல்
ஸ்டாலின் தலைமையில் இதுவரை சந்தித்த எந்த தேர்தலிலுமே வெற்றி பெறவில்லை திமுக. இந்த ஆர்கே நகர் இடைதேர்தலில் வெல்ல ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது ஓபிஎஸ் - தினகரன் மோதல். சரி, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிம்லாவை விட்டுவிட்டு புதியவரான மருதுகணேஷுக்கு சீட்டு கொடுத்துள்ளார் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த முடிவுக்கு கட்சிக்காரர்களிடம் நல்ல பெயர் கிடைத்தாலும் தொகுதியில் அது எதிரொலிக்கவில்லை. பதிலாக 'சிம்லா தோற்றாலும் நிறைய நல்லது செய்தார். ஆனால் மருதுகணேஷ் கஷ்டப்பட்டு போராடி வந்த பையன், செல்வாக்கு கம்மிகறதால எப்படி ஜெயிப்பாரோனு தெரியலை' என்கிறார்கள்.

திமுகவில் ஆர்கே நகர் தொகுதி தேர்தலுக்கான பொறுப்பு பிகே.சேகர்பாபு மற்றும் மாதவரம் சுதர்சனம் ஆகிய இருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் செலவு செய்ய ரொம்பவே யோசிக்கிறார்களாம். கட்சியில் இருந்து பண சப்போர்ட் எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். நிற்பதோ செலவு செய்ய முடியாத ஒரு நபர். தொகுதிக்குள் நல்ல பெயர் இருந்தாலும் கூட மதுசூதனனோடு போட்டி போடும்போது அது குறைவுதான். ஆனால் நல்லவர், கஷ்டப்பட்டு வந்தவர் என்ற இமேஜ் இருக்கிறது. அது ஒன்று தான் திமுக வேட்பாளரைக் காப்பாற்றவேண்டும்.
திமுகவில் சுமார் 20 ஆண்டுகளாக திமுகவில் இருக்கும் செல்வம் என்பவர் 'இந்த இடைதேர்தல் ஸ்டாலினுக்கான எடை தேர்தலா இருக்கும். இதுவரைக்கும் ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த எல்லா தேர்தல்களிலுமே தோல்விதான் கிடைச்சிருக்கு. இந்த செண்டிமெண்டை உடைப்பாரானு பார்க்கணும். முக்கியமா இந்த ஏரியால லேடீசை கவர்ந்தாதான் ஜெயிக்க முடியும். ஆனா ஸ்டாலின் கனிமொழியை பிரசாரத்துக்கு விட மாட்டார்னு செய்தி வருது. அப்படி ஒண்ணு நடந்தா அது கட்சிக்கு பின்னடைவாத்தான் இருக்கும்' என்கிறார்.
திமுகவில் தங்கள் பங்குக்கு ஒரு தனியார் நிறுவனத்தை வைத்து சர்வே எடுத்திருக்கிறார்கள். அந்த ரிச்ல்டை வைத்தே எவ்வளவு கவனிக்கலாம் என்று முடிவெடுக்கப் போகிறார்களாம்.
மதுசூதனனுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணி மேற்கொள்ளும் பிரசாரங்களைப் பார்க்கும்போது திமுக இன்னும் தீவிரமாக இறங்கவில்லை என்றே தோன்றுகிறது. கட்சி சப்போர்ட் இருக்கிறதோ இல்லையோ பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்கிறார் மருதுகணேஷ்.
திமுகவின் வெற்றி முழுக்க முழுக்க ஸ்டாலின் கைகளில்தான் இருக்கிறது. ஓபிஎஸ்சுக்கு டஃப் ஃபைட் கொடுத்தால் மட்டுமே இங்கே வெற்றிக்கனியை சுவைக்க முடியும்.
பிரச்சாரத்தை முதலில் ஆரம்பித்துவிட்டாலும், இனி வரும் நாட்களில் அதை எப்படி கொண்டு செல்லப் போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது எல்லாமே!
-ஆர்ஜி
-
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
50 ஆண்டு விசுவாசம்! திருப்பூரில் கழகத்திற்குள் கலவரம்.. விலகிய மா.செ மீண்டும் திமுகவில் ஐக்கியம்! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
வசமாக சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்? வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.. விஜய் கையில் முடிவு












Click it and Unblock the Notifications