ஆவிகள் இருக்கின்றன.. எந்த வகையிலாவது பழிவாங்கும்.. அதிர வைக்கும் "ஆவி நிபுணர்" ஹம்சவேணி!
சென்னை: என்னை கொலை செய்தவர்களை நான் பழிவாங்குவேன் என்று ஆவிகள் வந்து சொல்வதாக சமீப காலங்களில் படித்து வருகிறோம். ஆவியாவது பேயாவது எல்லாம் பொய் என்று பேசுபவர்களும், கமெண்ட் அடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில் ஆவிகள் உள்ளன என்று கூறுகிறார் கோவையைச் சேர்ந்த "ஆவியுலக" மீடியேட்டர் ஹம்சவேணி.
கடந்த பல ஆண்டுகளாகவே ஆவிகளுடன் பேசி அவர்களின் குறைகளை தீர்த்து வைத்து மீடியேட்டராக செயல்பட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த ஹம்சவேணி. அவரிடம் ஆவிகளின் உலகம் பற்றியும், ஆவிகள் பழிவாங்குமா? ஆவிகளுடன் தொடர்பு கொள்வது எப்படி என பல கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு எளிமையாகவும், ஆதரப்பூர்வமாகவும் நம்முடைய கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஹம்சவேணி.

ஆவிகளுடன் தொடர்பு கொள்ள விரும்பி நாம் முயற்சி செய்யும் பொழுது ஆவிகள் வந்து நம்முடன் பேச முயற்சி செய்யும் பொழுது அவை நமது உடம்பில் உள்ள எக்டோபிளாசம் என்ற ஒருவித சக்தியை உபயோகப்படுத்திக் கொள்கின்றன
ஆவிகள் வந்து இரண்டு வகைப்படும். அவை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் நம்ம வீட்டுக்கு முன்னோர்கள் ஆத்மாக்கள் புண்ணிய ஆத்மாக்கள். தற்கொலை, படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆத்திரத்துடன் அலைபவர்கள் துர்மரணம் அடைந்தவர்கள் பேய்களாக அலைவார்கள்.
துர்மரணம் அடைந்த ஆத்மாவை அழைத்து பேசுவது கொஞ்சம் ஆபத்தானது. வழிகாட்டி ஆத்மாக்களை நாம் பாதுகாப்பாக நம்முடன் வைத்துக்கொண்டு, நாம் அழைக்கும் துர்மரணம் அடைந்த ஆவிக்கு சாந்தி நிலை கொடுத்து. உயர்நிலை சக்தியுடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.
புண்ணிய ஆத்மாக்கள் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள். அவர்களுடன் நாம் பேசுவது எளிதானது. தற்கொலை செய்தவர்கள், கொலை செய்வது. அந்த ஆத்மாக்கள் அலைவது இயல்புதான். அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட எல்லா ஆன்மாக்களும் பேயாக வரும் என்று சொல்ல முடியாது
ஆவிகள் இருப்பது உண்மைதான்.நிறைய பேர் உணர்ந்து இருக்கிறார்கள். சிசிடிவி கேமராக்களில் ஆவிகள் பதிவாகியுள்ளன. ஆவிகளிடம் ஒரு சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் பேச முடியும்.
ஆவி உலக ஆத்மா நிரந்தரமானது. இதற்கு அழிவில்லை. முதன் முதலில் நம்முடைய முன்னோர்கள் ஆத்மாக்களை வழிபாட்டனர். அதுதான் குல தெய்வ வழிபாடு. இன்றைக்கும் இது இருக்கிறது. காவல் தெய்வங்கள், கடவுள்கள் வழிபாடு வந்தது என தொடர்கிறது.
நம்முடைய உடம்பில் எக்டோபிளாசம் அதிகமாக இருந்தால், கனவுகளில் மூத்தவர்கள் வந்து பேசுவார்கள். நம்முடைய உடம்பில் அதிகம் இருந்தால் அவர்கள் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்வது எப்படி எனில், ஒரு சில ஆன்மாக்கள் தானாக இறங்கி பேசுவார்கள். புண்ணிய ஆத்மாக்களை அழைத்து பேசலாம்.
இளம் வயதில் திடீர் மரணத்திற்கு, படுகொலைக்கு ஆளானவர்களின் ஆத்மாக்கள் பிறரது உடலில் இறங்கி தங்களின் குறைகளை கூறுவார்கள்.
ஆன்மாக்கள் அழைப்பது பூஜை செய்து வழிகாட்டிகள் மூலம் அழைக்கலாம். நம்முடைய உடம்பில் இறக்கலாம். நாம் வாழ்ந்த காலத்தில்
சரியாக நடந்தவகைளை சொல்லி நம்பிக்கைகளை வரவைத்து, இனி மேல் நடக்கப் போவதை கூற சொல்லாம்.
ஆவிகளை மூன்று வழிகளை தொடர்பு கொள்ளலாம். போர்டு வைத்து எழுத்துக்களை தொட்டு இதன் மூலம் கேள்விகளை கேட்கலாம். மயக்கநிலையில் நம் உடலில் முழுவதுமாக இறக்கி அவர்களைப் போல பேசுவது. இது கொஞ்சம் ரிஸ்க்.
ஆட்டோ ரைடிங் மெத்தட் மூலம் ஆன்மாக்களை தொடர்பு கொள்ளலாம். இது எளிமையானது. ஆன்மாக்களை நாம் அழைக்கும் போது பேனா நகர்ந்து பேச ஆரம்பிக்கும். அவர்கள் பேசுவது நம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆத்மாக்களுடன் பேச வருபவர்களுக்கு நடந்த விசயங்களை கூறி நம்பிக்கைகளை உருவாக்கி பின்னர் எதிர்காலத்தை கூற வேண்டும்.
எந்த ஆவியும் பழிவாங்கும் என்பதில் உண்மையில்லை. சாந்தகுணம் படைத்தவர்கள் பழிவாங்குவதில்லை. 90 சதவிகிதம் மேற்பட்டவர்கள் கொடூர கொலையை செய்தவர்கள் தண்டனையை அடைந்துதான் ஆகவேண்டும். இந்த பிறவியிலேயே அது நடக்கும்.
அதே நேரத்தில் நான் நேரடியாக அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை இது. எங்க வீட்டுக்கு பக்கத்தில் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் மீது அதிக பாசம். அந்த கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். திடீரென்று அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அந்த நபருக்கு வேறு திருமணம் முடிக்க பெண் பார்த்து விட்டு வந்தனர். ஆனால் அன்றைய தினம் இரவே அவர் மாரடைப்பில் மரணமடைந்து விட்டான். அவருக்கு 33 வயதுதான். ஏதாவது ஒரு வழியில் ஆவிகள் தண்டனை கொடுக்கும் என்பது இதன் மூலம் நான் அனுபவப்பூர்வமாக உணர்தேன் என்று முடித்தார் ஹம்சவேணி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications