எதை எடுத்தாலும் "2" பாஸ்.. அதிமுகவினரின் கண்களுக்கு (மட்டும்) தெரிந்த ஜெ. ராசி!
சென்னை: ஜெயலலிதா என்றால் ஜோதிடம், ராசி, சென்டிமென்ட் என்று நிறையவே அடுக்கலாம். அந்த வகையில் நேற்று கூட சில ராசியான சம்பவங்களைப் பட்டியலிட்டு எல்லாம் "அம்மா"வுக்கு சாதகமாகத்தான் இருக்கு என்று அதிமுகவினர் புளகாங்கிதத்துடன் கூறி வருகின்றனர்.
காணாமல் போவோரைக் கண்டுபிடிக்க எப்படி "பேமிலி சாங்" இருக்குமோ.. அதேபோல ஒவ்வொருவருக்கும் ஒரு ராசி எண் இருக்கும். உங்களுக்கு அந்த எண் இல்லைன்னு கவலைப்படாதீங்க.. ஆனா ஜெயலலிதாவுக்கு இருக்கு பாஸ். இப்போதைக்கு அவரது ராசி எண் 2 என்று சொல்கிறார்கள் (யாரு...?)

இதை வைத்தும், நேற்று ஜெயலலிதா ஓட்டுப்போட வந்தபோது நடந்த சிலவற்றை வைத்தும் ஒரு ராசி செய்தி ஓட ஆரம்பித்துள்ளது. அதாவது நேற்று ஜெயலலிதாவின் ராசியான 2 எண் வரும்படியாக சில நிகழ்வுகள் தற்செயலாக நடந்ததாம்.
ஜெயலலிதாவின் வாக்காளர் வரிசை எண் 1100 என்பதாகும் (கூட்டிப் பார்த்தால் 2 வருதா...)
அவர் வாக்களித்த நேரம் 9.56 மணி (கூட்டிப் பார்த்தால் 2 வருதா..)
ஜெயலலிதா வாக்களித்தபோது அவர் அந்த வாக்குச் சாவடியில் 200வது வாக்காளர் ஆவார் (இதுலயும் 2 வருதா...)
வாக்களித்து முடித்து விட்டு வெளியே வந்த ஜெயலலிதா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இன்னும் 2 நாளில் முடிவு தெரியும் என்று சொன்னாரா.. அதுலயும் "2" வருதா...!
இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரலையா.. எல்லாத்தையும் விட்ருங்க.. ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி பேரு என்ன....dr radhakrishnan nagar.. மொத்த எழுத்து எத்தனை... 20.. இப்பச் சொல்லுங்க.. பாஸ்... சொல்லுங்க...!
எப்பூடி!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications