இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search

கருணாஸுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா.. இன்று தெரியும்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    மதுரை: முன் ஜாமீன் கோரி கருணாஸ், மனு தாக்கல் தாக்கல் செய்துள்ள நிலையில், அவருக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

    முதலாவதாக, முதல்வரையும், காவல்துறை அதிகாரியையும் அவதூறாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசார் கருணாசை கைது செய்தனர்.

    [கை பிடித்து கதறி அழுது... மாமா... நீ சாப்ட்டியா.. இது ஒரு தாடிக்காரனின் "பக்கா" காதல் கதை!]

     நிபந்தனை ஜாமீன்

    நிபந்தனை ஜாமீன்

    இரண்டாவதாக, சேப்பாக்கத்தில் போராடியதற்காக திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாசும் வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தார்.

     வீடு பூட்டி இருந்தது

    வீடு பூட்டி இருந்தது

    மூன்றாவதாக, புளியங்குடியில் போன வருஷம் செப்டம்பர் 1-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 302-வது பிறந்த நாள் விழாவில் தேவர் பேரவை தலைவரின் கார் கண்ணாடியை உடைத்ததற்காக திரும்பவும் கைது என்ற தகவல் வந்தது. போலீசார் கைது செய்ய வீட்டுக்கு போனால் கருணாஸ் அங்கு இல்லை. வீடு பூட்டி இருந்தது.

     சாதாரண வார்டு

    சாதாரண வார்டு

    விடிகாலையிலேயே கருணாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வடபழனியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கருணாஸ் தற்போது தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார்.

     நாளை தெரிய வரும்

    நாளை தெரிய வரும்

    மருத்துவமனையிலேயே கருணாஸ் அனுமதிக்கப்பட்டாலும், புளியங்குடி வழக்கில் கைது ஆகாமல் இருக்க மதுரை கோர்ட்டில் முன் ஜாமீன் கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றமும், இன்று அதாவது 8-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் கருணாசுக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவரும்.

    வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

    English summary
    Will Karunas get bail in Madurai High Court today?

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more