ஜி.கே.வாசன் எங்கு நின்றாலும் அங்கு குஷ்புவை நிறுத்தி சங்கடப்படுத்த காங். திட்டம்?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டால், அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக நடிகை குஷ்புவை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் கட்சியின் இந்தத் திட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும் எப்படியாவது குஷ்புவை வைத்து ஜி.கே.வாசனை தர்மசங்கடத்தில் ஆழ்த்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.
மயிலாப்பூர் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிடலாம் என்று கருதப்படுவதால் அங்கு குஷ்புவுக்காக சீட் கேட்டு ஒருவர் மூலம் விருப்ப மனுவும் கொடுக்க வைத்துள்ளனராம்.

தேர்தலில் இதுவரை போட்டியிடாத ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன் அவரது தந்தை ஜி.கே.மூப்பனார் பாணியில் இதுவரை எந்தத் தேர்தல் களத்திலும் நின்றதில்லை. ராஜ்யசபா தேர்தலில் மட்டுமே இதுவரை போட்டியிட்டுள்ளார் வாசன்.

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா?
வரும் சட்டசபைத் தேர்தலில் வாசனை தேர்தல் களத்தில் இறக்க கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அவரை சென்னையில் போட்டியிட வைக்கலாம் என்றும் திட்டம் போட்டு வருகின்றனராம்.

எங்கு போட்டியிடுவார்?
அவர் எங்கு போட்டியிடுவார் என்று தெரியவில்லை. ஆனால் சென்னையில் போட்டியிட கட்சியினர் விரும்புகிறார்களாம். குறிப்பாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்களாம்.

தஞ்சைப் பக்கம்
சிலர் தஞ்சை மாவட்டத் தொகுதி ஒன்றில் வாசன் போட்டியிடலாம் என்று விரும்புகின்றனராம். இருப்பினும் இதுதொடர்பாக உறுதியாக எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் அவருக்கு எதிராக குஷ்புவைக் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

குஷ்புவை நிறுத்தி
வாசன் மயிலாப்பூரிலோ அல்லது வேறு தொகுதியிலோ போட்டியிட்டால் அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிடக் கூடுமாம். இதற்கு இளங்கோவன் தரப்பு தீவிரமாக முயற்சித்து வருகிறதாம்.

மயிலாப்பூரில் டிக்கெட் கேட்டு
குஷ்புவுக்காக மயிலாப்பூரில் டிக்கெட் கேட்டு அசோகன் என்பவர் விருப்ப மனு கொடுத்துள்ளாராம். இதை குஷ்புவும் உண்மைதான் என்றும் கூறியுள்ளாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications