"என்னம்மா"வை கையில் எடுத்த திமுக.. என்ன செய்யப் போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்?
சென்னை: ஜெயலலிதாவை அட்டாக் செய்த புது விளம்பரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது திமுக. இன்றைக்கு பேப்பர்,டிவி, டுவிட்டர், ஃபேஸ்புக் என அனைத்திலும் இந்த விளம்பரம்தான் வாக்காளர்களை அட்டாக் செய்தது.
திமுக கொடுத்துள்ள லேட்டஸ்ட் விளம்பரத்தில் உபயோகப்படுத்தியுள்ள "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?" என்ற வார்த்தை ஜீ டி.வியில் வரும் 'சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் பயன்படுத்தியது.

இந்த வார்த்தை தமிழகம் முழுவதுமே ரொம்ப பிரபலம். இதனை கிண்டல் செய்து விஜய் டி.வி. அது இது எது நிகழ்ச்சியில் கிண்டல் அடித்தது.
இதனால் கோபமடைந்து, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என லட்சுமி ராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் வரை சென்று புகார் கொடுத்தார்.
அது மட்டுமல்ல நல்ல நோக்கத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையை இப்போது ஒருவரை ஒருவர் கிண்டலடிக்க பயன்படுத்துகிறார்களே என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனைப்பட்டார்.
இதை எல்லாம் விட ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திக்கேயன் ' என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?... என்று பாட்டாக பாடினார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை இது விஜய் டிவியில் இருந்து எடுத்த வார்த்தை என்று சிவகார்த்திக்கேயன் கூறியதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கோபப்பட்டார்.
இனிமேல் யாரும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்று கேட்காதீர்கள் என்றும் சில வாரங்களுக்கு முன்பு வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனின் வார்த்தையை திமுக காப்பி அடித்து தனது விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளது.
இப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன செய்யப் போகிறார்?!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications