கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைப்பேன்.. மீண்டும் தொண்டர்களை சந்திப்பேன்.. அழகிரி அடுத்த இன்னிங்ஸ்
மதுரையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பெரிய சிலை நிறுவப்படும் என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மதுரையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பெரிய சிலை நிறுவப்படும் என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தினார்கள். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி வரை பேரணி நடந்தது.
ஆனால் இந்த பேரணியில் அழகிரி தரப்பு எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே இதில் கலந்து கொண்டு இருந்தனர்.

அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்
இதற்காக கடந்த ஒரு வாரமாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. ஆனால் பேரணிக்கு பின் முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இதனால் அவரது தொண்டர்கள் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

மீண்டும்
இந்த நிலையில்தான் அழகிரி மதுரையில் பேட்டி அளித்துள்ளார். அதில், விரைவில் தொண்டர்களை சந்தித்து பேசுவேன். இப்போதுதான் பேரணி முடிந்து இருக்கிறது. இந்த பேரணி குறித்து என் ஆதரவாளர்களிடம் ஆலோசனை செய்ய இருக்கிறேன். அதவாது மீண்டும் ஆதவாளர்களிடம் பேசும் திட்டத்தில் இருப்பதாக அழகிரி கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு சிலை
தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்க முடிவு செய்துள்ளேன். மதுரை பால்பண்ணையில் சிலை வைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அரசிடமும் அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி இருக்கும்
வெண்கலத்தில் சிலை வைக்கப்படும். ஆனால் சிலையின் உயரம் தோற்றம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்யவில்லை. மிகவும் பெரிய அளவில் தத்ரூபமாக சிலை செய்யப்படும் என்றுள்ளார்.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு












Click it and Unblock the Notifications