பச்சமுத்துவுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?
சென்னை: எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக 72 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்துவுக்கு செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
பச்சமுத்துவுக்கு ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்ட மாணவர்களும், மதனின் தாயாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தது சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றம்.
அதன்படி இன்று அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது. ஜாமீன் கிடைத்து வெளியில் வருவாரா பச்சமுத்து என்று அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications