தேர்தல் ஒத்திவைப்பு சென்டிமெண்ட்... ஆளுங்கட்சி ஆட்சியை இழக்குமாமே?
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சிக்கு ஆட்சி பறிபோகும் என்ற கடந்த கால, 'சென்டிமென்டை' நினைத்து, அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, மது வினியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி தேர்தலை, 23ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் கமிஷன் அறிவித்தது.
கடந்த, 25 ஆண்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதெல்லாம் ஆளுங்கட்சி தோல்வியை தழுவி, எதிர்க்கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது என்பதால் ஆளும் அதிமுகவினர் கலக்கமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

•கடந்த, 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சுயேச்சை வேட்பாளர்கள் மரணமடைந்தனர்.
•மருங்காபுரி, முசிறி, மதுரை கிழக்குஉள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
•230 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
•1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, எழும்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் இறந்த காரணத்தால், அங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
•1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக வெற்றி பெற்றது.
•1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நொய்யல் ஆறுபிரச்னை காரணமாக மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட, 1,450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு தாக்கல் செய்தனர்.
•ஓட்டுச்சீட்டு அச்சிட முடியாது என்பதால், மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
•1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில்,எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஆட்சியை பிடித்தது.
•வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்குப்பதிவு 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
•பொதுத்தேர்தலின் போது குறிப்பிட்ட தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நேரங்களில் எல்லாம், ஆளுங்கட்சி தோல்வி அடைந்து, எதிர்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
•இந்த சென்டிமெண்ட் இந்த தேர்தலிலும் தனது வேலையை காட்டி விட்டால் என்ன செய்வது என்று நினைத்து அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications