ஆர்.கே.நகர்.. அதிமுக கோட்டைதான்.. ஆனா இப்பப் பாருங்க எம்மாம் பெரிய ஓட்டை..!
சென்னை: டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர். அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை. இது நேற்று வரைதான். ஆனால் இன்று அதிமுக கலகலத்து கழன்று போய் கிடக்கிறது. இதனால் இடைத் தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த நடிகர் ஐசரிவேலன்தான் ஆர்.கே.நகரின் முதல் அதிமுக எம்எல்ஏ. அதன் பிறகு 4 முறை மட்டுமே இந்தத் தொகுதி வேறு கட்சிகளுக்குப் போயுள்ளது. அதைத் தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக மட்டுமே இதில் ஜெயித்து வந்துள்ளது.
கடைசியாக இத்தொகுதியின் அதிமுக எம்எல்.ஏவாக இருந்தவர் ஜெயலலிதா. இப்போது அவரது மறைவால்தான் இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. ஆனால் இதுவரை அதிமுக படைத்து வந்த வரலாறு இனியும் தொடருமா என்பது சந்தேகம்தான்.

7 முறை அதிமுக
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக இதுவரை மொத்தம் 7 முறை வென்றுள்ளது. இது மிகப் பெரிய வரலாறாகும். இத்தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

2 முறை திமுக
இந்தத் தொகுதியில் 2 முறை மட்டுமே திமுக வென்றுள்ளது. இரண்டு முறையும் வென்றவர் மறைந்த எஸ்.பி. சற்குணம். அவரைத் தாண்டி வேறு யாரும் திமுக சார்பில் இங்கு ஜெயித்ததில்லை.

2 முறை காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியும் இங்கு 2 முறை வென்றுள்ளது. 1980 தேர்தலில் வி.ராஜசேககரனும், 1984 தேர்தலில் வேணுகோபாலும் வென்றுள்ளனர்.அதன் பிறகு காங்கிரஸ் இந்தத் தொகுதிப் பக்கமே வந்தது கிடையாது.

அதிமுகவின் ஐவர் அணி
அதிமுக சார்பில் ஐந்து பேர் இங்கு 7 முறை வென்றுள்ளனர். இதில் ஐசரி வேலன் ஒரு முறை வென்றுள்ளார். ஜெயலலிதா, பி.கே.சேகர் பாபு ஆகியோர் தலா 2 முறை வென்றுள்ளனர். மதுசூதனன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் தலா ஒருமுறை போட்டியிட்டு வென்றுள்ளனர்.

பெரும் ஓட்டை
தற்போது அதிமுக பழைய பலத்துடன் இல்லை.சசிகலா குரூப், ஓ.பி.எஸ் குரூப், தீபா குரூப் என பிரிந்து சிதறிக் கிடக்கிறது. இரட்டை இலை சின்னம் நீடிக்குமா என்பதும் சந்தேகத்திற்கிடமாக உள்ளது. எனவே பழைய மாதிரி இங்கு அதிமுகவால் ஜெயிக்க முடியும் என்று நிச்சயம் கூற முடியாது.

அறுவடை செய்யப் போவது யார்
இப்படி பிரிந்து கிடக்கும் அதிமுக வாக்குகளை அலேக்காக அள்ளி வெற்றியை அறுவடை செய்யப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. தேர்தல் முடிவில்தான் அது தெரிய வரும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications