விவசாயி ராஜேந்திரன் வசமாகுமா.. விழுப்புரம்?
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் அடிப்படையில் விவசாயி ஆவார். இதுவரை எம்.எல்.ஏவாக இருந்து கூட பழக்கப்பட்டிராத அவர் முதல் முறையாக எம்.பி பதவிக்குப் போட்டியிடுகிறார்.
சுப்பராயன், பாக்கியம் தம்பதியின் புதல்வரான ராஜேந்திரன், வானூர் ஒன்றியம் ஆதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால் தற்போது இவர் குடியிருப்பது சென்னையில். இவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.

1956ம் ஆண்டு பிறந்த இவர் பி.ஏ படித்துள்ளார். அடிப்படைத் தொழில் விவசாயம். இவரது மனைவி சாந்தா ஆசிரியை ஆவார். இவர்களுக்கு திவ்யா, தீபிகா என இரு மகள்களும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வரும் இவர் 2001 முதல் 2006 வரை விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்துள்ளார். தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாய அணிச் செயலாளராக இருக்கிறார். இது போக மாவட்ட ஊராட்சிக்குழு 29ஆவது வார்டு உறுப்பினராகவும் இருக்கிறார்..












Click it and Unblock the Notifications