அதிமுகவின் தலைவராகிறாரா ரஜினிகாந்த்? கட்சியில் நடக்கும் அதிரடி மாற்றம்.. உண்மை என்ன?

நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செல்லூர் ராஜூ சொல்வதை நம்பவே முடியாது- வீடியோ

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகிறது.

    ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்து இன்றோடு 8 மாதங்கள் ஆகிவிட்டது. சென்ற டிசம்பர் 31ம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிட்ட அவர், ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயருடன் நின்றுவிட்டார்.

    கட்சி கொடியோ, கொள்கையோ அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் அவர் அதிமுகவின் தலைவராக ஆவாரா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    சிஸ்டம் சரியில்லை

    சிஸ்டம் சரியில்லை

    சென்ற ஆண்டு இறுதியில் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொல்லித்தான், ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுகிறது, அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று கூறினார். அதோடு தற்போதைய தமிழக தலைமை சரியாக இல்லை என்று நேரடியாக அதிமுகவிற்கு எதிராக பேசினார். இதனால் அவர் புதிய கட்சி தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    மாற்றி பேசினார்

    மாற்றி பேசினார்

    ஆனால் நிலைமை சில மாதங்களில் மாறியது. ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசை பாராட்டி பேச ஆரம்பித்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அரசுக்கு சாதகமாக பேசினார். அதேபோல், சேலம் சாலை பிரச்சனையில் வளர்ச்சி திட்டங்களை தடுக்க கூடாது என்று கூறினார். மிக முக்கியமாக கடைசியாக அவர் வீட்டு முன்பு கொடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழக அரசு நன்றாக செயல்படுகிறது என்று நேரிடியாக பாராட்டி பேசினார்.

    அமித் ஷாவின் திட்டம் என்ன?

    அமித் ஷாவின் திட்டம் என்ன?

    இந்த நிலையில் ரஜினியை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக நியமிக்க, இல்லை தலைவர் பொறுப்பை உருவாக்கி அந்த பதவியை அளிக்க அமித் ஷா முயல்வதாக கூறப்படுகிறது. அவரின் திட்டப்படி, தமிழகத்திற்கு முதல்வராக பாஜக ஆதரவுடன் ரஜினியும், இந்தியாவின் பிரதமராக மோடியும் வர வேண்டும். இதற்காகவே தற்போது அதிமுகவை ரஜினியை வைத்து வழி நடத்த முயற்சி எடுத்து வருகிறார்.

    மீண்டும் செக்

    மீண்டும் செக்

    ஆனால் இதற்கு அதிமுகவில் சில முன்னணி தலைமைகள் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாஜக அதிமுக உறவில் சிறிய விரிசலும் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் அடுத்தடுத்து அரசுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது என்று கூறப்படுகிறது. அமித் ஷா, அதிமுகவிற்கு வைத்த செக் இது என்று டெல்லியில் பேசிக்கொள்கிறார்கள்.

    எம்ஜிஆர் ஆதரவு

    எம்ஜிஆர் ஆதரவு

    ரஜினி இந்த அரசியல் மாற்றத்திற்காக சில நாட்களுக்கு முன்பில் இருந்தே தயாராகி வருகிறார். சென்னையில் நடந்த விழா ஒன்றில் ரஜினி எம்ஜிஆர் குறித்து பேசினார். எம்ஜிஆர் ஆட்சி போல் ஒரு ஆட்சியை தர வேண்டும் என்று முயற்சிப்பதாக கூறினார். அதேபோல் ஜெயலலிதாவை பாராட்டினார். இது இரண்டு தலைவர்களின் தொண்டர்களை தன் பக்கம் இழுக்க நடந்த பேச்சு என்றே கூறப்படுகிறது.

    தலைமை இல்லாதா அதிமுக

    தலைமை இல்லாதா அதிமுக

    இதை வைத்து அதிமுகவின் தலைவராக ரஜினியை பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னெடுப்புகள் விரைவில் நடக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே, மா.பா. பாண்டியராஜன் ரஜினி அதிமுகவில் சேர வாய்ப்புள்ளதாக பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+