"புரட்சி முதல்வர்" ஓ.பி.எஸ்ஸை கட்சியை விட்டு நீக்க தைரியம் இல்லாத சசிகலா!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வசம் இருந்த அதிமுக பொருளாளர் பதவியை மட்டும் பறித்துள்ளார் சசிகலா. அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவை அவர் எடுக்கவில்லை.
சென்னை: திடீரென புரட்சியில் குதித்து அதிமுகவினரை தூங்க விடாமல் செய்து விட்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது பொருளாளர் பதவியை மட்டும் பறித்துள்ளார் சசிகலா. அதேசமயம், அவரை கட்சியை விட்டு நீக்கினால் அதிமுகவினர் மொத்தமாக கொந்தளிபப்பார்கள் என்பதால் அதை மட்டும் அவர் செய்யவில்லை.
இதுவரை பணிவு, அமைதி, மென்மையான சிரிப்பு என்ற அளவில்தான் தமிழக மக்கள் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்துள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒருவரை, குறிப்பாக தனது கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை குற்றம் சாட்டி பகிரங்கமாகப் பேசியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

வழக்கமாக கட்சித் தலைமைக்கு எதிராக யாராவது கருத்து கூறினால் அவரை கட்சியை விட்டு நீக்குவார்கள். அந்த வகையில் தற்போது ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை விட்டு நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்படி ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டால் அது அதிமுகவின் பிளவுக்கு வழி வகுக்கும் என்பதால் இது பரபரப்பையும் கிளப்பியிருந்தது.
காரணம், ஓ.பன்னீர் செல்வத்திற்கு கிட்டத்தட்ட 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஓ.பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டால் கட்சி உடையும், ஆட்சியும் கவிழும். அப்படி ஒரு நிலை வந்தால் திமுக, வெளியிலிருந்து அதிமுகவுக்கு ஆதரவு தரக் கூடிய சூழல் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த. நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியை மட்டும் பறித்துள்ளார் சசிகலா. இதுவே ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. காரணம், அவரை முழுமையாக கட்சியை விட்டு நீக்கும் தைரியம் சசிகலாவுக்கு வரவில்லை. அவர் பயப்படுகிறார். ஓ.பி.எஸ்ஸை கட்சியை விட்டு நீக்கினால் கட்சி உடையும், தானும் திவாலாகி விரட்டப்படுவோம் என்ற அச்சம் சசிகலாவிடம் உள்ளதாக கருதப்படுகிறது. எனவேதான் அந்த முடிவை அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications