கலைஞருக்கு 'மினி பஸ்'.. அம்மாவுக்கு 'ஸ்மால்' பஸ்... ஆக மொத்தம் 2 பஸ்... சியர்ஸ்!
சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் மினி பஸ் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது அதிமுக தன் பங்குக்கு ஒரு குட்டி பஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மால் பஸ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த சிற்றுந்து சேவை சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மினி பஸ் சேவையானது, முற்றிலும் தனியார்மயமானது. ஆனால் அதிமுக அரசு தொடங்கியுள்ள இந்த ஸ்மால் பஸ் சேவை, முற்றிலும் அரசு வழங்கும் சேவையாகும்.
மினி பஸ்ஸுக்குப் போட்டியாக கருதப்படும் ஸ்மால் மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

1997 முதல்
தமிழகத்தில் 1996-2001ல் நடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போதுதான் மினி பஸ் சேவை அறிமுகமானது. அதாவது 1997ம் ஆண்டு இது அமலுக்கு வந்தது.

அரசு பஸ்களின் தடம் பதியாத இடங்களுக்கு
அரசு பஸ் சேவை இல்லாத, அரசுப் பேருந்துகளை இயக்க முடியாத தொலை தூரக கிராமங்களுக்கு சேவையாற்றும் வகையில் மினி பஸ் திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது.

1999ல் மாற்றம்
பின்னர் 1999ம் ஆண்டு மினி பஸ் சேவையில் சிறிய மாற்றத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அதன்படி கிராமப்பகுதிகளில் 20 கிலோமீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் அரசு சேவை உள்ள மார்க்கங்களில் 4 கிலோமீட்டர் வரை மினி பஸ்களை இயக்கவும் அனுமதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 4000 மினி பஸ்கள்
தற்போது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 4000 மினி பஸ்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடுத்த எடுப்பிலேயே ஹிட்
திமுகவின் இந்தத் திட்டம் எடுத்த எடுப்பிலேயே ஹிட்டானது. கிராமப்புற மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என சகல தரப்பினருக்கும் இந்த மினி பஸ் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.

நகரங்களிலும் நல்ல வரவேற்பு
கிராமப்புறங்களைத் தவிர நகர்ப்புறங்களிலும் மினி பஸ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆட்டோக்களுக்கு ஆப்பு...
மினி பஸ் வரவால் ஆட்டோக்களுக்கு கொட்டி அழும் நிலையிலிருந்து மக்கள் பெரும் விமோச்சனம் பெற்றனர். இண்டு இடுக்குகள், சந்து பொந்துகளிலெல்லாம் மினி பஸ்கள் ஓடத் தொடங்கியதால் ஆட்டோக்களை விட்டு விட்டு மினி பஸ்களை மக்கள் நாட ஆரம்பித்தனர்.

சென்னையில் மட்டும் இல்லை
இப்படி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ்களை சென்னை மாநகர மக்கள் மட்டும் பயணித்து அனுபவிக்க முடியாத நிலை நிலவி வந்தது. காரணம், சென்னையில் மினி பஸ்களை இயக்குவதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு.

மினி பஸ்சுக்குப் பதில் ஸ்மால் பஸ்
இந்த நிலையில்தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்காக அரசே ஸ்மால் பஸ் என்ற பெயரில் புதிய மினி பஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முற்றிலும் அரசே வழங்கும் சேவை.

மினியை ஓவர்டேக் செய்யுமா ஸ்மால்...
திமுக அரசு கொண்டு வந்த மினி பஸ் சேவை தமிழகம் முழுவதும் உள்ளது. ஆனால் ஸ்மால் பஸ் சேவை சென்னைக்கு மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுமா என்பது தெரியவில்லை.
பார்க்கலாம்.. மினி பஸ்ஸை, ஸ்மால் பஸ் ஓவர் டேக் செய்யுமா என்பதை.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications