ஒரு வேளை ஜெ. பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றால்.. அது அதிசயம் அல்ல!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கலந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் பங்கேற்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார். நாளை அவரும், அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

28 அமைச்சர்கள் நாளை முதல்வர் ஜெயலலிதாவுடன் பதவியேற்கவுள்ளனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 12 மணிக்கு விழா நடக்கிறது.
விழாவில் கலந்து கொள்ள பல்வேறு தரப்பினருக்கும் அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமீத் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பலரும் அழைப்பு போயுள்ளதாம்.
மு.க.ஸ்டாலின் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பங்கேற்றால் ஜெயலலிதா பதவியேற்பை விட தான் பங்கேற்றதே முக்கியத்துவம் பெறும் என்பதால் அவர் பங்கேற்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அவர் அப்படி கலந்து கொண்டால் அது அதிசயமாக பார்க்கப்படாது. காரணம், ஏற்கனவே ஒருமுறை ஸ்டாலின், ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்தான்.
2002ம் ஆண்டு நடந்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது தலைமையில் புதிய அதிமுக அமைச்சரவை பதவியேற்றது. அந்தப் பதவியேற்பு விழாவில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகனும், அப்போது சென்னை மேயராக இருந்தவரான மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவைப் பார்த்து ஸ்டாலின் வணக்கம் வைக்க, ஜெயலலிதா பதிலுக்கு வணக்கம் வைக்க என்று திமுக - அதிமுக இணைந்து தெரிந்த அதிசயத்தை அன்று உலகமே கண்டது என்பது நினைவிருக்கலாம்.
எனவே அந்த அதிசயம் மீண்டும் நாளை நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications