ஊழல், லஞ்சத்தை ஒழிக்க பிரதமர் மோடிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க தேமுதிகவும், நானும், பிரதமருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Will support Modi to eradicate corruption: Vijayakanth

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலத்தில் பேசிய போது, ஊழல் அபாயகரமானது. புற்றுநோயை விட ஊழல் மிக வேகமாக பரவி வருகிறது. ஊழல் நாட்டை அழித்துக் கொண்டு வருகிறது. அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளதை நாட்டு மக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். தேமுதிக சார்பில் நானும் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

முறைகேடுகளிலும், ஊழலிலும் ஈடுபடுபவர்களை பார்த்துக் கொண்டு எனது தலைமையிலான அரசு சும்மா இருக்காது என்று சொன்னது ஊழலில் திளைப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண பாமர மக்களால், அரசின் சிறு உதவிகளைக் கூட பெற முடியாமல் போகிறது.

எனவே, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள லஞ்சத்தையும், ஊழலையும் வேரோடு சாய்த்து இந்திய நாட்டை ஊழல் அரக்கனிடம் இருந்து விடுவிக்க வேண்டும். நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க தேமுதிகவும், நானும், பிரதமருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+