கருணாஸிற்கு உறுதுணையாக யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.. ஓ.பி.எஸ் உறுதி
கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். சென்னையில் தி நகரில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் அவர் கலந்து கொண்டார்.
விழாவில் மகாத்மா காந்தியின் அருமைகள், வரலாறு குறித்து பேசப்பட்டது. அதன்பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் அமைச்சர்களும் இடம்பெற்று இருந்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்
அதில், தமிழக மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இப்போதுதான் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு எதிராக அரசு நீதிமன்றம் வழியாக போராடும்.

மதுரை எய்ம்ஸ்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரையில் கண்டிப்பாக எய்ம்ஸ் அமையும். அந்த மாற்றமும் இதில் இல்லை.

தமிழகத்தில் நக்சலைட்
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அவர் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை. நக்சலைட் இருப்பதாக பொன் ராதா கிருஷ்ணன் கூறியது தவறானது. அதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தும்.

கருணாஸ் குறித்து
கருணாஸ் பேசியது தவறானது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இதில் கண்டிப்புடன் செயல்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications