இந்தியாவிடம் இருந்து செவ்வாய்கிரகத்தை கைப்பற்றுவோம்: பிலாவல் பூட்டோ சபதம்...டிவிட்டர் கலாட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிடம் இருந்து செவ்வாய் கிரகத்தை கைப்பற்றுவோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்ததாக ட்விட்டரில் மக்கள் கிண்டலடித்துள்ளனர்.

செவ்வாய் கிரத்தில் மங்கள்யான் விண்கலம் நுழைந்ததை இந்திய மக்கள் கொண்டாடி வருகிறார்கள். தலைவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் உள்ள சில காமெடிகளை பார்ப்போம்.

மமதா

மமதா

செவவ்வாய் கிரகத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகமாம். அதனால் நான் அந்த கிரகத்திற்கு தடை விதிக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவிக்கிறாராம்.

ராகுல்

ராகுல்

இந்தியாவுக்குள் இஸ்ரோவை யார் கொண்டு வந்தார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்கிறாராம்.

அர்னாப்

அர்னாப்

செவ்வாய் கிரகம் வரை பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமியின் சத்தம் கேட்கிறதாம்.

பிரதீபா பாட்டில்

பிரதீபா பாட்டில்

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் செவ்வாய் கிரகத்தில் ரியல் எஸ்டேட் விலை குறித்து இஸ்ரோவிடம் கேட்டுள்ளாராம்.

கெஜ்ரிவால்

கெஜ்ரிவால்

வாழ்த்துக்கள் மங்கள்யான். செவ்வாய்கிரகத்தில் ஊழலை கண்டுபிடித்தால் எங்களிடம் தெரிவிக்கவும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளாராம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

மங்கள்யான் வெற்றியை அடுத்து பாகிஸ்தான் தனது நாட்டு பாடப்புத்தகங்களில் செவ்வாய் கிரகத்தை நீக்கிவிட்டு 7 கிரகங்கள் மட்டுமே உள்ளதாக பிரிண்ட் செய்துள்ளது.

நவாஸ் ஷரீப்

நவாஸ் ஷரீப்

நாமும் இந்தியாவுக்கு போட்டியாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் சொன்னதற்கு அந்நாட்டு விஞ்ஞானிகள் ஏற்கனவே தயார் என்கிறார்களாம். சபாஷ் விண்கலம் எதுவரை செல்லும் என்று ஷரீப் கேட்க லாகூரில் ஏவினால் லூதியானா வரை செல்லும் என்கிறார்களாம் விஞ்ஞானிகள்.

ஏவுகணை

ஏவுகணை

செவ்வாய் கிரகம் வரை சென்று அதை சுற்றும் திறன் கொண்ட ஏவுகணை கூடவா உங்களிடம் இல்லை என்று ஷரீப் வடகொரியாவிடம் கூறுகிறாராம்.

அஷுதோஷ்

அஷுதோஷ்

மங்கள்யான் செவ்வாய்கிரக வாசிகளுடன் தொடர்பு கொண்டால் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரோ அஷுதோஷை தயார் நிலையில் வைத்துள்ளதாம்.

சூசன் ரோஷன்

சூசன் ரோஷன்

மங்கள்யானை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்ப சூசன் ரித்திக் ரோஷனிடம் கேட்ட ரூ.450 கோடி தான் செலவாகியுள்ளது.

ஐபோன் 6

ஐபோன் 6

ஏம்பா, செவ்வாய்கிரகத்தில் ஐபோன் 6 என்ன விலையில் கிடைக்கிறது?

பிலாவல்

பிலாவல்

நாங்கள் இந்தியாவிடம் இருந்து செவ்வாய் கிரகத்தின் ஒவ்வொரு இன்ச்சையும் கைப்பற்றுவோம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+