11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டா? இல்லையா?: தீர்ப்பை ஒத்தி வைத்தது ஹைகோர்ட் கிளை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு பிறப்பித்துள்ள அரசாணையைய ரத்து செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 Will the 11th standerd students should write public exam or not?

அப்போது அரசு சாார்பில் தாக்கல் செய்த மனுவில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம்.

பல பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடத்தை கற்றுக்கொடுக்காமல், பிளஸ் டூ பாடங்களை கற்றுக்கொடுக்கிறார்கள். பொதுத்தேர்வுஅறிமுகமானால்தான் 11வது வகுப்பு பாடத்தை கற்பிப்பார்கள்.

11வது வகுப்பு பாடத்தை கற்காததால் போட்டித்தேர்வுகளின்போது மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இவ்வாறு வாதிடப்பட்டது.

Competitions held for the students at the Abbulgal Memorial-Oneindia Tamil

இதனிடையே, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Will the 11th standerd students should write public exam or not? High court is reserved its judgment.
Please Wait while comments are loading...