ஜெயலலிதா உடல் தோண்டியெடுக்கப்படுமா? நீதிபதி கருத்தால் பரபரப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சென்னை ஹைகோர்ட் நீதிபதி கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

Will the High court order for autopsy for Jayalalitha?

இந்த மனு, ஹைகோர்ட் விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோது படம், வீடியோ என எதுவுமே வெளியாகாததை சுட்டிக் காட்டி தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில், நானே தொடர்ந்து வழக்கை விசாரித்திருந்தால், ஜெயலலிதா உடற்கூறு சோதனைக்கு உத்தரவிட்டிருப்பேன் என்ற கருத்தை அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று வேறு பெஞ்ச் வழக்கை விசாரிக்கும். அந்த பெஞ்ச் இதேபோல தீவிரகதியில் வழக்கை அணுகுமா என்பதை உறுதியாக கூற முடியாது. நீதிபதி வைத்தியநாதனை போன்ற மனநிலையில் அந்த பெஞ்ச் நீதிபதிகள் இருந்தால் ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வாய்ப்புள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்து வருகிறார்கள். ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. அதிமுக விசுவாசியாக இருந்த கராத்தே ஹுசைனியும், ஜெயலலிதா கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எனவே ஜெயலலிதா உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டால், சமாதியிலிருந்து அவரது உடல் வெளியே எடுக்கப்பட வேண்டிய தேவை ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+