அந்த அம்மா பயத்துல விஷால் ரெட்டி ரெட்டின்னு ரொட்டி சுடுறாங்க: வடிவேலு பரபர பேட்டி
மதுரை: விஷால் எதிர்த்ததால் அவரை ரெட்டிங்கிறாங்க அப்போ ரஜினிகாந்த் எதிர்த்தால் அவரை சிவாஜி ராவ் என்று சொல்லுவாங்களோ என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி, விஷால் அணி என இரண்டு அணிகள் மோதுகின்றன. இரு அணியினரும் கலைஞர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ராதிகா விஷாலை விஷால் ரெட்டி என்று சாதிப் பெயரை தெரிவித்து அழைத்தார்.
இது குறித்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

சரத்குமார்
எனக்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை வந்தபோது சரத்குமார் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராதிகா தெரிவித்துள்ளார். அவங்க ரொம்ப பொய் சொல்றாங்க. ஏன் இப்படி பிட் போடணும்.

கமல்
விஷாலை தூண்டிவிடுவது தான் கமல்ஹாஸனின் வேலையா. அவருக்கு என்ன வேறு வேலை இல்லையா? யாரும் யாரையும் தூண்டிவிடத் தேவையில்லை. அவர் அவருக்கு மூளை இருக்கிறது, அறிவு இருக்கிறது.

நடிகர் சங்கம்
அனைவருக்கும் பொதுவான சொத்தான நடிகர் சங்கத்தை மாமனும், மச்சானுமாக சேர்ந்து இடித்துவிட்டனர். கேட்டால் நீங்கள் ஏன் முன்பே வரவில்லை என்கிறார்கள். நாங்கள் எல்லாம் வரவில்லை என்றால் அதை இடித்துவிடுவீர்களா, விற்றுவிடுவீர்களா?

சிம்பு
சிம்பு ஒரு நல்ல கலைஞன். அவரை தூண்டிவிட்டு பேச வைக்கிறார்கள். அவர் பேசியது தவறு. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக பாக்யராஜே கூறியிருக்கிறார்.

ரஜினி
ரஜினி சாருக்கு எந்த அணிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரியும். அந்த அம்மா ராதிகா பேச்சுக்கு பேச்சு விஷால் ரெட்டி விஷால் ரெட்டி என்கிறாங்க. அனைத்து மொழி நடிகர்களும் இருக்கும் இடத்தில் விஷால் ரெட்டி என்று அவர் எதற்காக கூற வேண்டும்.

ஊர்வசி
தனது பக்கத்தில் சேச்சி ஊர்வசியை வைத்துக் கொண்டு அந்த அம்மா விஷால் ரெட்டி ரெட்டிங்குறாங்க. அப்போ ரஜினிகாந்த் எதிர்த்தால் அவரை சிவாஜி ராவ் என்பீர்களா? யார் எதிர்த்தாலும் சாதியை சொல்லுவீங்களா?

பயம்
அந்த அம்மாவுக்கு பயம் வந்துடுச்சு. அதான் ரெட்டி ரெட்டின்னு ரொட்டி சுடுறாங்க. நாசர் சுத்த தமிழன். அவர் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை ஒதுக்குவார்களா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications