ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா.. விரைவில் அறிவிப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்றார்.
அங்கு சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
மீனவர் மீதான தாக்குதலை மக்கள் நலக் கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. போராடும் மக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு இனி நடக்காது என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

ஆந்திராவில் தமிழர்கள் சித்ரவதை
அதே போன்று ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் மோசமான முறையில் சித்ரவதை செய்யப்படுவதும் வன்மையான கண்டத்திற்குரியது. தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து தமிழர்களை மீட்க வேண்டும்.

நடவடிக்கை என்ன?
மக்கள் நலக் கூட்டியக்கத்தைச் சேர்ந்த 3 கட்சிகளும் விரைவில் கூடி பேச உள்ளோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்தும், தாமிரபரணியில் கோக், பெப்சி நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பது குறித்து உயர்நீதிமன்றம் அளித்திருக்கின்ற அனுமதி குறித்தும், ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படுவது குறித்தும் பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்று அறிவிக்க உள்ளோம்.

ஆர்.கே. நகர் ஆலோசனை
ஆர்.கே. நகரில் வெற்றி வாய்ப்பை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் நலக் கூட்டியக்கம் போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம். இரண்டொரு நாட்களில் 3 கட்சிகளும் பேசி வேட்பாளரை முடிவு செய்வோம். யார் வேட்பாளர் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று திருமாவளவன் கூறினார்.

திருமாவளவன் போட்டி?
இதனிடையே, ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் ஆர். கே. நகர் தொகுதியில் நீங்கள் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகிறதே என்று செய்தியாளர் ஒருவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, அது இன்னும் முடிவாகவில்லை என்றும் விரைவில் யார் என்பதை அறிவிப்போம் என்றும் திருமாவளவன் பதில் அளித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications