ஜமாலுதீனுக்கு பதவி நீட்டிப்பு இல்லை : தமிழக சட்டசபை செயலாளராக பூபதி நியமனம்
தமிழக சட்டசபை செயலராக பூபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பூபதியை நியமித்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையின் செயலாளராக உள்ள ஜமாலுதீனின் பதவிக்காலம் இன்றோடு முடிகிறது. ஏற்கனவே பதவி நீட்டிப்பு பெற்று சட்டசபை செயலாளராக உள்ள ஜமாலுதீனின் பதவியை நீட்டிக்கக் கூடாது என்று பலரும் வலியுறுத்தினர். மேலும் பதவி நீட்டிப்பு தருவதால் இவருக்கு அடுத்த அளவில் உள்ள அதிகாரிகளின் பதவிஉயர்வு தடைபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் சட்டசபை கூடுதல் செயலராக உள்ள பூபதி புதிய சட்டசபை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 8 மாதங்களில் பூபதியின் பதவிக்காலம் முடியும் நிலையில் அவரை இந்தப் பதவிக்கு சபாநாயகர் தனபால் நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய செயலராக அறிவிக்கப்பட்டுள்ள பூபதி சபாநாயகர் தனபாலிடம் வாழ்த்து பெற்றார். 1983ல் சட்டசபை உதவிப் பிரிவு அதிகாரியாக பூபதி அரசுப் பணியில் இணைந்தவர். பூபதி இன்றே தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications