இன்று பொதுக்குழுவிற்கு வருவாரா சசிகலா? ஒரு பலே திட்டம்
இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு சசிகலா வருவாரா மாட்டாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இன்று கூட உள்ள அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா பங்கேற்க மாட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமான பின்னர், அக்கட்சியின் பொதுக் குழு மற்றும் செயற்குழு முதன் முறையாக இன்று கூட உள்ளது. ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவிற்கு கொடுக்க முன்னணித் தலைவர்களும், நிர்வாகிகளும் தயாராக உள்ள நிலையில், சசிகலாவிற்கு அந்தப் பதவியை வழங்க பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இன்று கூட உள்ள பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா பங்கேற்கும் போது, அவரை எதிர்ப்பவர்கள் யாராவது எதிர்த்துக் குரல் கொடுத்து கண்டனம் தெரிவிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சசிகலா பொதுக் குழுவில் பங்கேற்க மாட்டார் என்றும் பொதுக் குழுவில் சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று தீர்மானம் போட்ட பிறகு அந்தத் தீர்மானத்தின் நகலை சசிகலாவிடம் தரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு சசிகலா செல்வார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வரும், அதிமுகவினர் அனைவரையும் தனியார் சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அப்படியே சொகுசு பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு பொதுக் குழுக் கூட்டம் நடக்கும் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் போடப் போகும் நேரத்தில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications