இருந்தாலும் விஜயகாந்த் இப்படியெல்லாம் பாஜகவை சோதிக்கப்படாது....!
ஸ்ரீரங்கம்: பாஜகவினரைப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருக்கிறது. அவர்களைப் பார்த்தால் தேமுதிகவினருக்கே கூட பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால் தேமுதிக தலைமையோ அதைப் பற்றிக் கவலை கூட படுவதாக தெரியவில்லை.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆதரவு தருவதாக இதுவரை வெளிப்படையாக விஜயகாந்த் கூறவில்லை. ஆனால் அவரது ஆதரவுடன்தான் வேட்பாளரை அறிவித்ததாக பாஜக கூறி வருகிறது.
இருப்பினும் இதுவரை விஜயகாந்த் ஸ்ரீரங்கம் தேர்தல் குறித்து வாயே திறக்காமல் உள்ளார். பிரசாரத்திற்காவது வருவாரா என்பதும் தெரியவில்லை. அவர் கூலிங் கிளாஸ் போட்டு, "பளார்" என சிரிக்கும் புகைப்படத்துடன் கூடிய பிரசார வாகனம் மட்டுமே தொகுதிக்குள் வலம் வந்து கொண்டுள்ளது.

நான்கு முனைப் போட்டியில் ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்து களம் குதித்தது. ஆனால் லேட்டாக களம் இறங்கினாலும் ரகளையாக வேலை செய்து வருகிறது அதிமுக. அக்கட்சி வேட்பாளர் வளர்மதிக்காக ஒட்டுமொத்த அரசு எந்திரமும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அமைச்சர்களின் முகங்களாகவே தெரிகிறது.

டிராபிக் ராமசாமி
இவர்களோடு டிராபிக் ராமசாமியும் கூட மல்லுக்கட்டி வருகிறார். அவரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கூடவே பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களையும் கண்காணித்தும் வருகிறார்.

பாஜகவின் பரிதாபம்
இந்த கட்சிகளுக்கு மத்தியில் பாஜகவின் நிலைமைதான் பரிதாபமாக உள்ளது. பாஜக இங்கு கடும் போட்டியைக் கொடுக்கும், அதிமுக, திமுகவை அலறடிக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் உண்மையில் பாஜகதான் கலங்கிப் போய் நிற்கிறது.

துணைக்கு வராத பாமக
பாஜக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக கருதப்படும் பாமக இந்தத் தேர்தலை புறக்கணித்து விட்டது. கூட்டணியை விட்டே மதிமுக போய் ரொம்ப நாளாகி விட்டது. மிச்சம் இருக்கிற கூட்டணிக் கட்சிகளில் பெரியதாக கருதப்படும் தேமுதிகவும் கூட ஏதோ சாஸ்திர சம்பிரதாயத்திற்காக பாஜகவுக்கு ஆதரவு தருவது போல காட்சி இருக்கிறது.

முறுக்கிக் கொண்ட விஜயகாந்த்
ஆரம்பத்தில் ஸ்ரீரங்கத்தில் தேமுதிக போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பாஜக தான் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தது. மேலும் வேட்பாளராக சுப்பிரமணியத்தையும் அறிவித்தனர். இதனால் விஜயகாந்த் அப்செட் ஆனார்.

நேரில் போய்ப் பார்த்து சமரசம்
இதையடுத்து தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விஜயகாந்த்தை நேரில் போய்ப் பார்த்து அவரிடம் பேச்சு நடத்தினர். அவர் போய் வேலையைப் பாருங்க, தேமுதிகவே நிற்பதாக நினைத்து வேலை பாருங்க என்று தனது கட்சியினரைக் கேட்டுக் கொண்டதாகவும் பாஜக தரப்பில் கூறப்பட்டது.

பிரசாரத்தில் தேமுதிகவினர்
அதற்கேற்ப ஸ்ரீரங்கம் பிரசாரத்தில் தேமுதிகவினரும் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பாஜகவின் பிரசாரத்தில் ஒரு சுரத்தும் இல்லை. தினசரி காலையில் கிளம்பி போகிறார்கள். மாலையில் ரிட்டர்ன் ஆகி விடுகிறார்கள்.

விஜயகாந்த் வருவாரா, மாட்டாரா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வந்தால்தான் கலகலப்பாக இருக்கும், பலமாக அமையும் என்று பாஜக தலைவர்கள் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால் விஜயகாந்த் தற்போது பாஜக தலைவர்களைச் சந்திக்காமல் தட்டிக் கழித்து வருவதாக கூறப்படுகிறது.

தலைவரைப் பார்க்கப் போனா மச்சான் வர்ராரு!
விஜயகாந்த்தை யார் பார்க்கப் போனாலும் அவரது மச்சான் சுதீஷை மட்டுமே பார்க்க முடிகிறதாம். பாஜக வேட்பாளர் சுப்பிரமணியமும் கூட விஜயகாந்த்தைப் பார்க்க கடுமையாக முயன்றும் முடியாமல் போய் விட்டதாம்.

11ம் தேதிக்குள்
11ம் தேதி ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. அதற்குள் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் உள்ளனர். 10ம் தேதி அவர் வரலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.

இதுல இவங்க வேற!
இந்த களேபரத்தில் அதிமுகவினர் ஸ்ரீரங்கத்தில் வைத்து தேமுதிக நிர்வாகிகள் பலரை கட்சிக்குள் இழுத்து வருகின்றனர். பலரும் அலை அலையாக தேமுதிகவை விட்டு அதிமுகவுக்கு ஓடி வருகின்றனராம். இதனால் தேமுதிக தரப்பிலும் கடும் பீதியில் உள்ளனராம்.
ரொம்பக் கஷ்டமான நிலைதான் போல!
-
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக்











Click it and Unblock the Notifications