தொண்டர்கள் பேச்சை விஜயகாந்த் கேட்பாரா அல்லது கேட்க மாட்டாரா?
சென்னை: தொண்டர்களிடம் கேட்டு அவர்கள் சொன்னதை வைத்துத்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தேன் என்று அடிக்கடி சொல்லி வந்தார் விஜயகாந்த். அதாவது அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியி பிறகு.
இப்போதும் அவரது கட்சியின் அதே தொண்டர்கள், தனித்துப் போட்டியிடுவோம் என்று உரத்த குரலில் உளுந்தூர்ப்பேட்டையில் வைத்து விஜயகாந்த்திடம் தெளிவாக கூறி விட்டனர்.
ஆனால் இப்போதும் தொண்டர்கள் குரலை விஜயகாந்த் மதிப்பாரா அல்லது, இதுதான் என் முடிவு ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தன் முடிவை அவர்கள் மீது திணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எல்லாமே தொண்டர்களைக் கேட்டுத்தான்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது முதல் முறையாக கூட்டணி அரசியலுக்கு மாறினார். இதை எனது தொண்டர்களிடம் கேட்டு, அவர்கள் விருப்பத்தின்படியே செய்வதாக அப்போது கூறினார்.

என்ன சொன்னார்கள் தொண்டர்கள்
சேலத்தில் விஜயகாந்த் கூட்டிய மாநாட்டின்போது கூட்டணி சேருவோம் என்றும் அதிமுகவுடன் சேரலாம் என்றும் தொண்டர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் சொல்வதை ஏற்பதாக பின்னர் விஜயகாந்த் அறிவித்தார்.

இப்ப என்ன சொன்னாங்க
இப்போது தேமுதிகவின் தொண்டர்கள் உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டினின்போது தனித்துப் போட்டியிடுவோம் என்று குரல் கொடுத்துள்ளனர்.

விஜயகாந்த்தே இதை எதிர்பார்க்கவில்லை
ஆனால் தொண்டர்கள் இப்படிச் சொல்வார்கள் என்று விஜயகாந்த்தே கூட எதிர்பார்க்கவில்லை என்றுதான் தெரிகிறது. காரணம், அவர் பாஜக அல்லது திமுகவுடன் கூட்டணி சேரவே ஆர்வமாக உள்ளார்.

பாஜக பக்கம் போவாரா
குறிப்பாக பாஜகவுடன்தான் அவர் தீவிரமாகப் பேசி வருகிறார். அக்கட்சியுடன்தான் கூட்டணி அமைப்பார் என்றும் பரவலாக கருதப்படுகிறது. இதனால்தான் தொண்டர்கள் தனித்துப் போட்டி என்றதும் விஜயகாந்த்துக்கு அது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும் என்கிறார்கள்.

தனது முடிவைத் திணிப்பாரா..
எனவே தொண்டர்கள் கூறியபடி தனித்துப் போடியிடாமல் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை எடுத்து, இதை நீங்கள் பின்பற்றுங்கள் என்று விஜயகாந்த் கூறினாலும் கூறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரொம்பக் குழப்பமாத்தான் இருக்கு.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications