மோடி பிரதமரானால் வரவேற்பேன்: மு.க. அழகிரி அதிரடி பேட்டி
மதுரை: திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரி அடுத்தடுத்து தெரிவித்து வரும் கருத்துகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் சஸ்பென்ஸ் ஆகவே இருந்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனாகிய மு.க. அழகிரி தமது சகோதர் மு.க.ஸ்டாலின் வசம் கட்சி செல்வதில்லை விரும்பவில்லை. இதனால் ஸ்டாலினின் அத்தனை நிலைப்பாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சற்று அமைதியாக இருந்த மு.க. அழகிரி திடீரென டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அத்துடன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ஜெயலலிதாவை பாராட்டினார். திமுகவின் 39 தொகுதி வேட்பாளர்களையும் மாற்ற வேண்டும் என்றார்.
இதனிடையே மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க. அழகிரி. இந்த கூட்டத்தில் தனிக்கட்சி எதுவும் தொடங்கப்போவதில்லை என்று கூறினார். அக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, நாட்டில் மோடி அலை வீசுவதாக நான் நம்புகிறேன். மோடியைப் பொறுத்தவரையில் நல்ல நிர்வாகி என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். அவர் பிரதமரானால் நான் வரவேற்பேன் என்றார்.
கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசி வரும் மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடியை ஜெயலலிதா விமர்சிக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் விமர்சிப்பதால் அதற்கு நேர் எதிராக மு.க. அழகிரியோ நரேந்திர மோடியை ஆதரித்து கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications