2011ல் வெறும் 17 பேர்தான்.. இந்த முறை எத்தனை பெண்கள் சட்டசபைக்குப் போகப் போகிறார்களோ?
சென்னை: 2011 சட்டசபைத் தேர்தலில் வெறும் 17 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்று எம்.எல்.ஏக்கள் ஆகினர். இந்த முறையாவது அவர்களின் எண்ணிக்கை கூடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாகவே சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.
இதற்காகத்தான் 33 சதவீத இட ஒதுக்கீடாவது கொடுங்கப்பா என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஆனால்அதற்கும் கூட வழியில்லாத நிலைதான்.

143 பேர் போட்டி
தமிழக சட்டசபையில் கடந்த 2011ல் நடந்த தேர்தலின்போது மொத்தமே 143 பேர்தான் போட்டியிட்டனர். கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் இதில் அடக்கம்.

2006ல் 156
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இதை விட அதிகமாக அதாவது 156 பெண்கள் பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் போட்டியிட்டிருந்தனர்.

வென்றது 17 பேர்தான்
இதில் 17 வேட்பாளர்கள் மட்டுமே வென்று எம்.எல்.ஏக்கள் ஆகினர். 111 வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை பறிபோனது.

வரலாறு காணாத பின்னடைவு
அதற்கு முந்தைய தேர்தல்களை விட 2011ல்தான் பெண் வேட்பாளர்களுக்கு யோகம் அடிக்கவில்லை என்று கூற வேண்டும்.

2006ல் பரவாயில்லை
2006ம் ஆண்டு பரவாயில்லை. அப்போது நடந்த தேர்தலில் 22 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வெறும் 3 பேர்தான்
சென்னையைப் பொறுத்தவரை வெறும் 3 பெண்கள் மட்டுமே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பா. வளர்மதி, கோகுல இந்திரா, ராஜலட்சுமி ஆகியோரே அவர்கள். பின்னர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

அதிமுகவுக்கு ஆட்கள் அதிகம்
வென்ற 17 பெண் எம்.எல்.ஏக்களில் அதிமுகவினரே அதிகம். அதாவது ஜெயலலிதா உள்பட 9 பேர் போட்டியிட்டனர். 9 பேரும் வெற்றி பெற்றனர். அதேசமயம், அதிமுக வெறும் (ஜெயலலிதாவையும் சேர்த்து) 9 பெண்களுக்கு மட்டுமே சீட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவிலிருந்து ஒருவர் மட்டுமே
அதேசமயம், திமுக சார்பில் 11 பேர் போட்டியிட்டனர். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புஷ்பலீலா மட்டுமே வெற்றி பெற்று சட்டசபைக்குச் சென்றார்.

காங்கிரஸிலிருந்து ஒருவர்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விஜயதாரணி வெற்றி பெற்று சட்டசபைக்குச் சென்றார். சிபிஎம் கட்சியிலிருந்து பாலபாரதி திண்டுக்கல்லில் வென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications