ரஜினியின் ‘பெயர் மாற்ற’ கோரிக்கையை வெற்றி பெறும் அணி முடிவு செய்யும்: குஷ்பு
சென்னை: நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான ரஜினியின் கோரிக்கையை வெற்றி பெறும் அணி முடிவு செய்யும் என நடிகை குஷ்புத் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளியில் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் எதிரெதிராக மோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர், நடிகைகள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்களித்தபின் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
அதன்படி, நடிகை குஷ்பு வாக்களித்த பின் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
‘நல்ல படியாக வாக்குபதிவுகள் நடக்கின்றன. கண்டிப்பாக வெற்றி நல்ல அணிக்கே வந்து சேரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எந்த அணிக்கு எனது ஆதரவு என நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். வெற்றி இன்று மாலை தெரிந்துவிடும். ரஜினி சார் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் என்றால் வெற்றி பெறும் அணி தான் அதை முடிவு செய்யவேண்டும் நான் முடிவு பண்ணக்கூடாது' என்றார்.
இதேபோல், வாக்களித்தபின் நடிகர் சரத்பாபு கூறுகையில், "தேர்தல் ரொம்ப அமைதியாக போய்கொண்டு இருக்கிறது. அதேபோல அமைதியாகவே முடியும். தேர்தல் முடிவுகளும் பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்கு இனங்கவே முடிவுகளும் இருக்கும். நடிகர் சங்கத்துக்கு எந்த அணி நல்லது பண்ணுமோ அந்த அணி தான் வரும். மறுபடியும் நடிகர் சங்கத்தோட வைபவத்தை நாம் கண்ணால் பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications