மக்கள் நலன் கருதி வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெறுங்கள் - முதல்வர் கோரிக்கை
பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணியைத் தொடர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணியைத் தொடர கோரிக்கை வைத்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 7முதல் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
இவ்வாறு போராட்டம் தொடர்ந்தால் அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகளை செப்டம்பர் 4ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்தது.
ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவாரத்தை தோல்வியடைந்தது. கோரிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே முதல்வரிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
சாதகமான முடிவு வராவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணியைத் தொடர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி விடுத்துள்ள அறிக்கை :
ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் வரும் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு, இச்சங்கங்களின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தியது.
இக்கூட்டத்தில், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். பொதுவாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது, ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிப்பது, அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவது என்ற நான்கு கோரிக்கைகளை முக்கியமான கோரிக்கைகளாக வலியுறுத்தி பேசினர்.
இது குறித்து விரிவாக விவாதித்த பின்பு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் குழு திருத்தியமைக்கப்பட்டதை எடுத்துரைத்து, இக்குழுவின் அறிக்கை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்கப்படவுள்ளது என்றும், அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஊதிய விகிதம் திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, காலமுறை ஊதியத்திற்குப் பதில் முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் குறித்து, இதற்கென அமைக்கப்பட்ட ஊதியக் குழு பரிசீலித்து வருவதாகவும், இக்குழு இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும், இதில் மேலும் காலதாமதம் ஏற்படாது என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்குமென்றும், அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும், அதன் தற்போதைய நிலை குறித்தும் தெளிவாக விளக்கி, இந்த அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications