ஒரு பைசா கூட கொடுக்காமல் 4 ஆயிரம் ஒட்டுகள்... நாம் தமிழர் கட்சிக்கு குவியும் பாராட்டுகள்!
ஆர்கே நகர் தேர்தலில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தாலும் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சி 4 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதற்கு பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தாலும் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சி 4 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளதற்கு பாராட்டுகள் குவிகின்றன. முடியாது என்பதே கிடையாது நிச்சயம் ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் என்று பலரும் ஆதரவுக் கருத்துகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதே போன்று பாஜக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது, நோட்டா பாஜகவை முந்தியது என்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறின. இவை அனைத்தையும் விட நல்ல விஷயமாக பார்க்கப்பட்டது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி.
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2513 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆனால் நடந்து முடிந்த 2017 இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 ஆயிரத்து 860 வாக்குகள் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் இந்த வளர்ச்சி அந்த கட்சியின் இளைஞர்களை குஷிப்படுத்தியுள்ளது.
|
ஒரு பைசா கூட பணம் தரவில்லை
ஒரு பைசா கூட வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 4 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளது. ஆர்கே நகரில் நிஜமான வெற்றி பெற்ற வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் தான் என்று டுவிட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தேர்தலுக்காக பாடுபட்ட சீமான், மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார் இவர்.
|
நாளை மலரும் நாம் தமிழர் கட்சி
புரட்சி நிச்சயம் வெல்லும் அதை நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி சொல்லும் என்று மகிழ்ச்சியாக டுவீட்டியுள்ளார் இவர். ஆர்கே நகர் தேர்தல் முடிவை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
|
திமுக,அதிமுக, பாஜக எதிர்ப்பு ஓட்டு
10 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பிரச்னையை திமுக முன் எடுத்தது. ஆனால் அதை இப்போது திமுக விட்டுவிட்டது, நாம் தமிழர் கட்சி அதை கையில் எடுத்திருப்பதால், திமுக,அதிமுக, பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளதாக இவர் டுவீட்டியுள்ளார்.
|
நாம் தமிழர் வெல்லும்
முடியாதது என்பது எதுவுமே இல்லை. நிச்சயம் ஒரு நாள் நாம் தமிழர் கட்சி வெல்லும் என்று நம்பிக்கையோடு பதில் டுவீட் போட்டுள்ளார் இவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications